×
 
☰

பாக்.-ன் 22% தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு இந்தியா காரணமா..?? வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!! அறிக்கை சொல்வது என்ன?

இதனால் அணையில் 3 மில்லியன் ஏக்கர்-அடிக்கும் மேற்பட்ட தண்ணீரைச் சேமிக்க முடியாமல் போயுள்ளது.

பாகிஸ்தானில் அக்டோபர் 1 முதல் மார்ச் 31 வரை நீடிக்கும் ரபி பருவம் தொடங்கியுள்ள நிலையில், கோதுமை, பார்லி, கடுகு உள்ளிட்ட முக்கிய குளிர்காலப் பயிர்களுக்கு நீர்ப்பாசனத் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம் (IRSA) எச்சரித்துள்ளது. பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களுக்கு 22 சதவீத குறைவான நீர் பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் நிலையை உருவாக்கியுள்ளது.

IRSA ஆலோசனைக் குழுவின் அங்கீகாரத்தின்படி, ரபி பருவத்தில் மொத்த நீர் இருப்பு சுமார் 29.18 மில்லியன் ஏக்கர்-அடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 1991 நீர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தேவைப்படும் அளவை விட குறைவு. பஞ்சாபுக்கு 15.564 மில்லியன் ஏக்கர்-அடியும், சிந்துவுக்கு 11.748 மில்லியன் ஏக்கர்-அடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. பலூசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களுக்கு குறைப்பு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பற்றாக்குறைக்கு இந்தியாவின் சிந்து நதிநீர் ஒப்பந்த நிறுத்தம் காரணமல்ல என்பது IRSA அறிக்கைகளிலேயே தெளிவாகியுள்ளது. தார்பெலா அணையின் சுரங்கப்பாதை-4 மற்றும் சுரங்கப்பாதை-5 நீர்மின் திட்டப் பணிகள் நீண்டகாலமாக தாமதமாகி வருகின்றன. இதனால் அணையில் 3 மில்லியன் ஏக்கர்-அடிக்கும் மேற்பட்ட தண்ணீரைச் சேமிக்க முடியாமல் போயுள்ளது.

இதையும் படிங்க: பிரம்மாண்ட பேரணி சென்ற இம்ரான் கான் ஆதரவாளர்கள்..!! தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை..!! அடுத்த கட்டம் என்ன..??

செப்டம்பர் 30 நிலவரப்படி மொத்த சேமிப்பு 9.343 மில்லியன் ஏக்கர்-அடியாக இருந்தது. இது கடந்த ஆண்டின் 13.214 மில்லியன் ஏக்கர்-அடியை விட சுமார் 27 சதவீதம் குறைவு. மேலும், காரிஃப் பருவத்தில் நதி நீர்வரத்து எதிர்பார்த்ததை விட 8 சதவீதமும், முந்தைய ஆண்டை விட 22 சதவீதமும் குறைந்திருந்தது.

2025 ஏப்ரலில் பகல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்தது. ஆனால் இது தரவுப் பகிர்வு மற்றும் முன்னறிவிப்புகளை மட்டுமே பாதிக்கிறது. நதிநீர் இயல்பாகவே எல்லையைக் கடந்து பாய்கிறது என இந்தியா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் விவசாயம் 80 சதவீதத்திற்கும் மேல் சிந்து நதிப் படுகையை நம்பியுள்ளது. கடந்த ஆண்டு கோதுமை உற்பத்தி இலக்கை விட குறைந்ததால் இறக்குமதி தேவைப்பட்டது. தற்போதைய நீர் பற்றாக்குறை மேலும் உற்பத்தியைப் பாதித்து, மாவு விலை உயர்வு மற்றும் உணவுப் பற்றாக்குறை அபாயத்தை அதிகரிக்கலாம். இருப்பினும், உள்நாட்டுத் திட்டத் தாமதங்களையும் நிர்வாகச் சிக்கல்களையும் சரிசெய்யாமல், வெளிநாட்டுக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது நெருக்கடியைத் தீர்க்காது.

இதையும் படிங்க: உணவுப் பஞ்சத்தின் விளிம்பில் பாகிஸ்தான்? இந்தியா வைத்த 'செக்'கால் அதிகரிக்கும் நெருக்கடி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share