×
 

பலூசிஸ்தானில் இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் அதிகரிக்கும் ஆதரவு.. சோஷியல் மீடியாவில் பலூச் படையினர் வெறித்தனம்!

பாகிஸ்தானின் பலுாசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்

பாகிஸ்தானின் பலுாசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.

பாகிஸ்தானின் தென்மேற்கில் உள்ள மிகப் பெரிய மாநிலம் பலூசிஸ்தான். இதை தனி நாடாக அறிவிக்கக்கோரி நீண்ட காலமாக பலூசிஸ்தான் விடுதலைப் படையினரும் பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பலூசிஸ்தானில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் பலுாச் விடுதலை படையின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. இதனால், அப்பகுதிக்குள் பாகிஸ்தான் ராணுவத்தால் நுழைய முடியவில்லை.



இந்நிலையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதனையடுத்து பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியபோது இந்தியா துல்லியமான பதிலடியைத் தந்தது. இதேபோல பாகிஸ்தான் ராணுவத்தின் மீது பலூசிஸ்தான் விடுதலை படையும் தாக்குதல் நடத்தியது. மேலும் இந்தியாவின் ஆதரவையும் பலூசிஸ்தான் எதிர் நோக்கியுள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்றும் பலூசிஸ்தான் குரல் கொடுத்து வருகிறது.



இதற்கிடையே பலுாசிஸ்தானை தனி நாடாக  விடுதலைப் படையினர் அறிவித்தனர். பாகிஸ்தானிலிருந்து வெளியேறிவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பலூச் விடுதலை படையினர் இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். பலுாச் விடுதலைப் படையைச் சேர்ந்த மீர் யார் என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், 'பலுாசிஸ்தான் மக்கள், இந்திய மக்களுக்கு முழு ஆதரவு தெரிவிக்கிறோம். பாகிஸ்தானுக்கு சீனா உதவுகிறது. பலுாசிஸ்தானும் அதன் மக்களும் இந்திய அரசுக்கு ஆதரவாக உள்ளோம்.

இதையும் படிங்க: போர் நிறுத்தம் பாக்-ன் பச்சோந்தி வேலை..! BLA-வின் மாஸ்டர் பிளான்..! இந்தியாவுக்கு ஓபன் ஆதரவு..!

பிரதமர் மோடிக்கு நாங்கள் சொல்ல விரும்புவது, நீங்கள் தனியாக இல்லை; 6 கோடி பலுாச் தேசபக்தர்களின் ஆதரவும் இந்தியாவுக்கு உள்ளது. சர்வதேச நாடுகள் பாகிஸ்தானை உடனடியாக ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு வெளியேற வலியுறுத்த வேண்டும். அப்படி இல்லையெனில், டாக்காவில் 93,000 (1971இல்) பாகிஸ்தான் படையினர் சரணடைந்தது போன்ற மற்றொரு அவமானத்தைப் பாகிஸ்தான் சந்திக்க நேரிடும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பாக்.,ஐ அழிக்கணும்... அந்த 93,000 துப்பாக்கிகளை கொடுங்கள்... இந்தியாவிடம் உதவி கேட்கும் பலூச்படை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share