விரைவில் நலம் பெறுங்கள் பைடன்..! அமெரிக்க முன்னாள் அதிபர் குறித்து பிரதமர் மோடி வருத்தம்..!
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 46ஆவது அதிபராக இருந்தவர் ஜோ பைடன். இவர் கடந்த 2021-2025 வரை அமெரிக்காவின் அதிபராக இருந்தார். 82 வயதான ஜோ பைடன், கடந்தாண்டு நடந்த அதிபர் தேர்தலில் வயது மூப்பு மற்றும் உடல்நிலை காரணமாக போட்டியிடவில்லை. தற்போது டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அதிபராக உள்ளார்.இந்த நிலையில் ஜோ பைடன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில் அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது அவருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பதாகவும், இந்த புற்றுநோய் கிளீசன் ஸ்கோர் 9 (கிரேடு 5) எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தீவிரமான புற்றுநோய் எனக் கூறப்படும் நிலையில் பைடனும், அவரது குடும்பத்தினரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் ஆலோசித்து வருகின்றனர். ஜோ பைடன் விரைவில் குணமடைய பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்கள் வாழ்த்தி வருகின்றனர். இந்த நிலையில் ஜோ பேடன் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எதிர்பாரா துயரச்சம்பவம்..! ஹைதராபாத் தீ விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்.. பிரதமர் இரங்கல்..!
இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ஜோ பைடன் உடல்நிலை குறித்து அறிந்து மிகவும் கவலையடைந்ததாகவும் அவர் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பலூசிஸ்தானில் இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் அதிகரிக்கும் ஆதரவு.. சோஷியல் மீடியாவில் பலூச் படையினர் வெறித்தனம்!