வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

“அறிவு இருக்கா?” – அன்புமணி நிகழ்ச்சியில் எழுத்துப்பிழையுடன் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு…!

தமிழ் ஆர்வலர் என கூறும் அன்புமணி ராமதாஸ் நிகழ்வில் எழுத்துபிழையுடன் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு.

தமிழ் ஆர்வலர் என கூறும் அன்புமணி ராமதாஸ் நிகழ்வில் எழுத்துபிழையுடன் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு. அறிவு என்ற வார்த்தையையே எழுத்துபிழையுடன் பேனர் வைத்த பாமக.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அறிவுசார் நகரம் அமைக்கும் திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

முன்னதாக விளை நிலங்களில் இறங்கி பார்வையிட்ட அன்புமணி ராமதாஸ் விளை நிலங்களை அழித்து அறிவுசார் நகரம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாயிகளுடன் இணைந்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற நிகழ்விற்காக பாமக சார்பில், வேண்டாம், வேண்டாம், அறிவு சார் நகரம் வேண்டாம் என மேடையில் பேனர் வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: யார் எந்த யாத்திரை போனாலும் மக்கள் ஏற்க மாட்டார்கள் – அன்புமணியை டாரு டாராக கிழித்த ராமதாஸ்…!

தமிழ் ஆர்வலர் என கூறி கொள்ளும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற நிகழ்விற்காக மேடையில் வைக்கப்பட்ட பேனரில் அறிவு என்ற வார்த்தையை அறவு என எழுத்துபிழையுடன் பேனர் வைத்திருந்தனர். அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற நிகழ்வில் தமிழ் எழுத்து பிழை இருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: நடைபயணத்திற்கு தடையில்லை – அன்புமணிக்கு கிடைத்த ஹேப்பி நியூஸ்…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी