வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
அரசியல்

சீரழியும் மருத்துவத்துறை.. திமுக அரசு தான் பொறுப்பேற்கணும்.. அன்புமணி கடும் சாடல்..!

மருத்துவத் துறையின் சீரழிவுக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முன்னுதாரணமாக இருந்த தமிழக மருத்துவத்துறை இப்போது சீரழிவுப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது; 

அரசு மருத்துவமனைகளில் தூய்மைப் பணியாளர்களே மருத்துவம் அளிக்கும் அவலம்: மருத்துவத் துறையின் சீரழிவுக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்!

இதையும் படிங்க: தமிழகத்தில் பெண்கள் வாழவே முடியாதா? ஆளும் திமுக அரசை நோக்கி கேள்வி எழுப்பும் டிடிவி தினகரன்..!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில்  காலில் அடிபட்டு காயத்துடன் வந்த நோயாளி ஒருவருக்கு  அங்கு பணியாற்றும் துப்புரவுப் பணியாளர் ஒருவரே  மருத்துவம் அளித்த காட்சி காணொலியாக வலம் வருவது அதிர்ச்சியளிக்கிறது.  தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் எத்தகைய அவல நிலையில் உள்ளன என்பதற்கு இந்த காணொலி தான் சான்று ஆகும்.

காயமடைந்த நோயாளிக்கு தூய்மைப் பணியாளர் மருத்துவம் அளிக்கவில்லை; ஏற்கனவே போடப்பட்ட கட்டை மட்டும் தான் பிரித்தார் என மருத்துவமனை தரப்பில் அளித்துள்ள விளக்கம் அபத்தமானது.  நோயாளிகளூக்கு கட்டை பிரிப்பது தூய்மைப் பணியாளரின் வேலை அல்ல. அந்தப் பணியை பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர் தான் மேற்கொள்ள வேண்டும். தூய்மைப் பணிகளை மேற்கொண்ட பணியாளர் ஒருவர், அப்படியே நோயாளிக்கு மருத்துவம் அளித்தால்  சம்பந்தப்பட்ட நோயாளிக்கு நோய்த்தொற்று ஏற்படும் ஆபத்துகள் உள்ளன. இவற்றை அறிந்திருந்தும் ஒரு நோயாளிக்கு தூய்மைப்பணியாளர் மூலம் சிகிச்சையளிக்கச் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுவது தான் சிக்கலுக்குக் காரணம் ஆகும். மருத்துவப் பணியாளர்களை போதிய அளவில் நியமிக்க வேண்டிய  தமிழக அரசு, அதைச் செய்யாமல்  வீண் விளம்பரங்களிலும், பொய்ப்பரப்புரைகளிலும் மட்டும்  தான் ஈடுபட்டு வருகிறது.

ஒரு காலத்தில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முன்னுதாரணமாக இருந்த தமிழக மருத்துவத்துறை இப்போது சீரழிவுப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.  உயிர்க்காக்கும் துறையில் அலட்சியமாக செயல்படுவதை விடுத்து மருத்துவத் துறையில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: இளைஞர்களின் எதிர்காலத்தில் கொஞ்சம் கூட அக்கறை இல்லை.. திமுகவை கிழித்த ஓபிஎஸ்..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी