கிரீன்லாந்து விவகாரம்!! அது எங்க வேலையில்லை!! அமெரிக்கா தலையீடு குறித்து புடின் பேச்சு!
கிரீன்லாந்து விவகாரம் எந்தவிதத்திலும் தங்களை பாதிக்காது என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோ: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்து தீவை வாங்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இது தங்களை எந்த வகையிலும் பாதிக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு (ஜனவரி 21, 2026) நடைபெற்ற தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய புடின், "கிரீன்லாந்திற்கு என்ன நடக்கிறது என்பதை கவனிப்பது எங்களின் வேலையல்ல. இது நிச்சயமாக எங்களை பாதிக்காது. டென்மார்க் கடுமையான அணுகுமுறையை கையாண்டு வருகிறது. அவர்கள் தங்களுக்குள் தீர்த்துக்கொள்ளட்டும்" என்று கூறினார்.
கிரீன்லாந்து விவகாரம் கடந்த சில மாதங்களாக உலக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. டிரம்ப், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு கிரீன்லாந்து அவசியம் என்று கூறி, டென்மார்க்குக்கு தொடர் நெருக்கடி கொடுத்து வருகிறார்.
இதையும் படிங்க: நாங்க மட்டுமே வரி விதிப்போம்!! எங்களுக்கு யாரும் வரி விதிக்க கூடாது! அமெரிக்க அமைச்சர் அடாவடி!
கிரீன்லாந்தை வாங்கும் திட்டத்தை எதிர்த்தால் பிரிட்டன் உள்பட 8 நாடுகளுக்கு பிப்ரவரி 1 முதல் 10 சதவீத வரி விதிப்பு, ஜூன் மாதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தப்படும் என்று மிரட்டிய டிரம்ப், பின்னர் அந்த முடிவை வாபஸ் பெற்றார். இந்த அழுத்தம் நேட்டோ அமைப்பின் ஒற்றுமையையும் குலைத்துள்ளது.
புடின் தனது உரையில் வரலாற்று உதாரணங்களையும் குறிப்பிட்டார். "1917-இல் டென்மார்க் தனது விர்ஜின் தீவுகளை அமெரிக்காவுக்கு விற்றது. 1867-இல் ரஷ்யா அலாஸ்காவை 7.2 மில்லியன் டாலருக்கு (அப்போதைய மதிப்பில்) அமெரிக்காவுக்கு விற்றது.
இவை அனைத்தும் அவர்களின் முடிவு. கிரீன்லாந்து விவகாரமும் அதேபோலத்தான்" என்று கூறினார். ரஷ்யாவுக்கு கிரீன்லாந்து மீது எந்த உரிமை கோரிக்கையும் இல்லை என்றும், இது அமெரிக்கா-டென்மார்க் இடையேயான விவகாரம் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இந்த கருத்து உலக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. டிரம்பின் கிரீன்லாந்து திட்டம் ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் இந்த நடுநிலை அணுகுமுறை, ஆர்க்டிக் பிராந்தியத்தில் ரஷ்யாவின் நலன்களை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கிரீன்லாந்து தீவு ஆர்க்டிக் பகுதியில் மிக முக்கியமான இராணுவ மற்றும் வள ஆதார மையமாக உள்ளது.
இதையும் படிங்க: போருக்கு தயாரா இருங்க! வம்பிழுக்கும் அமெரிக்கா! படைகளை தயார் செய்யும் கிரீன்லாந்து! அதிகரிக்கும் பதட்டம்!