அமெரிக்காவின் குடுமி இப்போ சீனா கையில்! கடன் பொறியில் சிக்கியதால் அதிர்ச்சி!
'சீனாவின் கடன் பொறியில் சிக்கவேண்டாம்' என்று உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துவிட்டு, அதில் முதல் ஆளாக சிக்கியிருப்பது வல்லரசு நாடான அமெரிக்கா தான் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
உலக நாடுகளுக்கு “சீனாவின் கடன் பொறியில் சிக்காதீர்கள்” என்று பல ஆண்டுகளாக எச்சரித்து வந்த அமெரிக்கா, தானே அந்தப் பொறியில் முதலிடத்தில் சிக்கிக் கொண்டிருப்பதாக புதிய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அமெரிக்காவின் பிரபல வில்லியம் அண்டு மேரி கல்லூரியின் ‘எய்ட்டேட்டா’ (AidData) ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2000 முதல் 2023 வரை சீனா உலகம் முழுவதும் வழங்கிய மொத்தக் கடன் தொகை சுமார் 177 லட்சம் கோடி ரூபாய். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்தக் கடனில் பாதிக்கு மேல் (50 சதவீதம்) வளர்ந்த நாடுகளுக்கே சென்றிருக்கிறது. அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்காதான்! சீன அரசு வங்கிகள் அமெரிக்க நிறுவனங்களுக்கு வழங்கிய கடன் மட்டும் 17,000 கோடி ரூபாய்க்கு மேல் என்று அறிக்கை தெரிவிக்கிறது.
இது நேரடி அரசு கடன் அல்ல: சீன அரசு நேரடியாக அமெரிக்க அரசுக்கு கடன் கொடுக்கவில்லை. அதற்குப் பதிலாக, சீன நிறுவனங்கள் அமெரிக்காவில் முதலீடு செய்வதற்கும், அமெரிக்க நிறுவனங்களை வாங்குவதற்கும் சீன அரசு வங்கிகள் ரகசியமாக கடன் கொடுத்துள்ளன. இந்தக் கடன்களில் 88 சதவீதம் உயர் தொழில்நுட்பம், செமிகண்டக்டர், பயோடெக்னாலஜி, ரோபாட்டிக்ஸ், குவாண்டம் கம்ப்யூட்டிங், பாதுகாப்பு தொழில்நுட்பம் போன்ற மிக முக்கியமான துறைகளுக்குத்தான் சென்றுள்ளது.
இதையும் படிங்க: இப்போ தும்முனா சரியா இருக்கும்!! மோடி வரும் நேரம் மெட்ரோ சர்ச்சையை கிளப்பியது ஏன்?
2015-ல் சீனா அறிமுகப்படுத்திய “மேட் இன் சீனா 2025” திட்டத்தின்படி, இந்த 10 முக்கிய துறைகளில் 70 சதவீதம் தன்னிறைவு பெற வேண்டும் என்ற இலக்கை வைத்து, அமெரிக்க நிறுவனங்களையே கடன் கொடுத்து தன் வலையில் சீகிரமாக இழுத்துள்ளது சீனா.
“கொடூர மிருகம்” என்று டிரம்ப் சொன்னது இப்போது பொருந்துகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பலமுறை சீனாவை “கடன் வழியில் வேட்டையாடும் கொடூர மிருகம்” என்று குற்றம் சாட்டினார். ஆனால் இப்போது அந்த மிருகத்தின் வலையில் அமெரிக்காவின் முக்கிய தொழில்களின் “குடுமி” சிக்கியுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வெள்ளை மாளிகை முன்னாள் முதலீட்டு ஆலோசகர் வில்லியம் ஹெனகன் கூறுகையில், “மற்றவர்கள் பல்லாங்குழி விளையாடிக் கொண்டிருக்கும் போது, சீனா சதுரங்க ஆட்டம் ஆடியுள்ளது. ஒரு நாட்டின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் முக்கிய தொழில்கள் யாருடைய கையில் இருக்கிறது என்பதில்தான் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படுகிறது. தற்போது சீனாவின் கையே ஓங்கி இருக்கிறது” என்று எச்சரித்துள்ளார்.
சீனாவின் “ரகசிய கடன்” தந்திரம்; சீனா இந்தக் கடன்களை வெளிப்படையாக அறிவிப்பதில்லை. தன் நிறுவனங்கள், தனியார் வங்கிகள் வழியாக ரகசியமாக செயல்படுத்துகிறது. அதனால் உலக நாடுகளும், அமெரிக்காவும் இதை உடனடியாக உணர முடியவில்லை. ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகளுக்கு கொடுத்த “கடன் பொறி” தந்திரத்தை அதே போல வளர்ந்த நாடுகளுக்கும் பயன்படுத்தி, இப்போது அமெரிக்காவையே தன் சென்டிமெண்ட்டல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது சீனா.
இந்த அறிக்கை அமெரிக்க அரசியல், பொருளாதார வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “சீனாவிடமிருந்து பிற நாடுகளை காப்பாற்றப் போவதாக எச்சரித்துவிட்டு, தானே முதலில் சிக்கிக் கொண்டது” என்று உலகம் முழுவதும் இப்போது பேசுகிறது.
இதையும் படிங்க: நானே வரேன்... திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கு... விசாரணைக்கு நேரடியாக சென்ற நீதிபதி...!