×
 
☰

இந்த முறையாவது கிடைக்குமா நோபல்?! 8 போரை நிறுத்தியதாக அதிபர் டிரம்ப் மீண்டும் சுயதம்பட்டம்!

டிரம்ப் கடந்த பல ஆண்டுகளாகவே அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

வாஷிங்டன்: “8 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளேன்” என்று கூறி, அமைதிக்கான நோபல் பரிசு மீதான தனது எதிர்பார்ப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். அமைதிக்கான நோபல் பரிசு வெற்றியாளர் அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக டிரம்ப் தெரிவித்துள்ள இந்தக் கருத்து சர்வதேச அரசியலில் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், தான் தற்பெருமைக்காக பேசவில்லை என்றும், இதுவரை வேறு யாரும் செய்யாத பல விஷயங்களைச் செய்துள்ளதாகவும் கூறினார். எந்த அமெரிக்க அதிபரும் போர்களை முடிவுக்குக் கொண்டு வந்திருக்க வாய்ப்பில்லை என்று குறிப்பிட்ட அவர், தனது பதவிக்காலத்தில் 8 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்ததாகத் தெரிவித்தார்.

மேலும், விரைவில் தனது பட்டியலில் மற்றொரு போர் நிறுத்தமும் சேரக்கூடும் என்று டிரம்ப் கூறினார். இதன் மூலம் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தனது தகுதியை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: எரிபொருள் விலை உயர்வுக்கு ஈரான் போர் காரணமல்ல!! உக்ரைன்தான் காரணம்!! அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டு!

டிரம்ப் கடந்த பல ஆண்டுகளாகவே அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக, 2025-ம் ஆண்டு நோபல் அமைதிப் பரிசு தனக்கு கிடைக்காதது குறித்து அவர் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

கிரீன்லாந்தை கைப்பற்றுவது தொடர்பான டிரம்பின் முயற்சியால் அமெரிக்காவுக்கும் நார்வே உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையே சர்ச்சைகள் எழுந்திருந்த நிலையில், தனக்கு நோபல் பரிசு வழங்கப்படாதது குறித்தும் அவர் விமர்சித்திருந்தார். அதன்பின்னர், உலக அமைதி தொடர்பான விவகாரங்களில் மட்டும் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் தனக்கு இல்லை என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இதற்கு நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோ, நோபல் அமைதிப் பரிசு யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை நார்வே அரசு தீர்மானிப்பதில்லை என்றும், சுதந்திரமான நார்வே நோபல் குழுவே அதனைத் தேர்வு செய்கிறது என்றும் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில், 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு வெற்றியாளர் அக்டோபர் 9-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளார். ஈரானுடனான அமெரிக்காவின் தற்போதைய மோதல் உள்ளிட்ட சர்வதேச சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, டிரம்புக்கு இந்த முறை நோபல் பரிசு கிடைப்பதற்கான வாய்ப்பு குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

டிரம்பின் “8 போர்களை முடித்தேன்” என்ற கூற்று மற்றும் நோபல் பரிசு மீதான அவரது தொடர்ச்சியான எதிர்பார்ப்பு, நாளைய அறிவிப்புக்கு முன்பாக மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: ரஷ்யாவில் Plague அச்சம்!! புடினுடன் விரைவில் பேசுவேன்! டிரம்ப் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share