இதோ ஆரம்பிச்சிட்டானுங்கல்ல!! பெட்ரோல், டீசல் விலை உயர்வு!! ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எடுத்த அதிர்ச்சி முடிவு!
மேற்காசிய போர்ச்சூழல் காரணமாக துபாயை உள்ளடக்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பெட்ரோல் விலையை இன்று முதல் (மே 1) உயர்த்தியுள்ளது. இத்தகவலை அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) நாட்டில், மேற்காசியப் பகுதியில் நிலவும் போர் பதற்றம் காரணமாக பெட்ரோல் விலை இன்று (மே 1) முதல் உயர்த்தப்பட்டுள்ளது. துபாய் உள்ளிட்ட அனைத்து எமிரேட்களிலும் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஏப்ரல் மாதத்தில் கணிசமாக உயர்ந்ததையடுத்து, சூப்பர் 98, சூப்பர் 95 மற்றும் E-Plus 91 ஆகிய மூன்று பெட்ரோல் ரகங்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவுக்கு எரிபொருள் விலை கண்காணிப்புக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இக்குழு ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்தை கணக்கில் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விலையை நிர்ணயம் செய்கிறது.
இதையும் படிங்க: அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் போர் முடியாது!! ஈரானுக்கு அமெரிக்க அமைச்சர் திட்டவட்டம்!
இந்த விலை உயர்வால், பொதுமக்களின் போக்குவரத்து செலவு கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தினசரி வாகனப் பயன்பாட்டாளர்கள், டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் வணிக வாகனங்களைப் பயன்படுத்துபவர்கள் இந்த உயர்வால் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள்.
மேற்காசியப் பகுதியில் தொடரும் போர் பதற்றம் மற்றும் புவிசார் அரசியல் காரணங்களால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கங்கள் அதிகரித்துள்ளன. எண்ணெய் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளிலும் இந்தப் பாதிப்பு எதிரொலித்துள்ளது. வினியோகத் தடைகள் மற்றும் சந்தை ஏற்ற இறக்கங்கள் காரணமாகவே இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துபாயில் வசிக்கும் இந்தியர்கள் உட்பட பல்வேறு நாட்டு பிரஜைகள் இந்த விலை உயர்வால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தினசரி பயணம் செய்பவர்களுக்கு இது கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் நாட்களில் சர்வதேச அளவில் எண்ணெய் விலை நிலவரம் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்து அடுத்த மாத விலை மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தானுக்கு தகுதி இல்லை!! மேற்காசிய போர்! ஈரான் எம்.பி காட்டம்!