×
 

மீண்டும் வெடித்தது போர்... ஈரான் மீது குண்டு மழை பொழிந்த அமெரிக்கா... செம்ம ஷாக்கில் உலக நாடுகள்...!

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.

அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு பதிலடியாக, ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. இதையடுத்து பாரசீக வளைகுடா பகுதியில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ராணுவத்தின் ஏஎச்-64 அப்பாச்சி வகை ஹெலிகாப்டர் மீது ஈரான் வெடிகுண்டு ஏந்திய ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ஹெலிகாப்டர் சேதமடைந்த நிலையில், அதில் இருந்த வீரர்களை அமெரிக்க கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுக்கு தக்க பதிலடி அளிக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.

இதையும் படிங்க: அமெரிக்கா பாதுகாப்பாக இருக்க விரும்பினால்..!! ஈரானை விட்டு வெளியேறுங்கள்!! மீண்டும் வார்னிங்!

இந்த நிலையில், அமெரிக்க ராணுவம் ஈரான் மீது மீண்டும் அதிரடி தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள ஹூகேஸ்தக், சிரிக், மினாப் மற்றும் கடலோர நகரமான பந்தர் அப்பாஸ் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஈரானின் நியாயமற்ற நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி அளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் மத்திய ராணுவ கட்டளை அமைப்பான சென்ட்காம் தெரிவித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதால், பாரசீக வளைகுடா பகுதியில் பரபரப்பும் பதற்றமும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் ஈரான் தக்க பதிலடி அளிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்க ராணுவத்தினர் பாதுகாப்பாக இருக்க விரும்பினால் ஈரானை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். தங்கள் மண்ணில் அத்துமீறி நுழைந்த அந்நியர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது பாரசீக வளைகுடா வரலாற்றின் பல அத்தியாயங்களில் பதிவாகியுள்ளதாகவும் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கடும் கோபத்தில் கண்கள் சிவந்த டிரம்ப்... நள்ளிரவில் ஈரானை பதம் பார்த்த அமெரிக்கா... நடந்தது என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share