×
 

அரசுமுறை பயணமாக சீனா செல்கிறார் ட்ரம்ப்! 9 ஆண்டுகளுக்கு பின் வரலாற்று சந்திப்பு!

போர் பதற்றத்துக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மே 13 முதல் 15 வரை சீனாவுக்கு அரசுமுறைப் பயணம். 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வரும் மே 13 முதல் 15 வரை சீனாவிற்கு மூன்று நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். உலகப் பொருளாதாரத்தின் இரு பெரும் சக்திகளுக்கு இடையே நிலவும் வர்த்தகப் போர் மற்றும் சர்வதேசப் போர் பதற்றங்களுக்கு மத்தியில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று இந்தப் பயணம் அமைய உள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு, சுமார் 9 ஆண்டுகள் இடைவெளியில் அமெரிக்க அதிபர் ஒருவர் சீனாவிற்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும். புதன்கிழமை (மே 13) மாலை பெய்ஜிங் சென்றடையும் ட்ரம்பிற்கு, வியாழக்கிழமை காலை சீன அரசு சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. தியான்மென் சதுக்கத்தில் வரவேற்பு, 'டெம்பிள் ஆஃப் ஹெவன்' (Temple of Heaven) விஜயம் மற்றும் பிரம்மாண்ட அரசு விருந்து ஆகியவற்றில் ட்ரம்ப் பங்கேற்கிறார். உலகமே உற்று நோக்கும் இந்தப் பயணத்தில் சில முக்கிய ஒப்பந்தங்கள் எட்டப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்கா - சீனா இடையே நிலவும் இறக்குமதி வரி (Tariffs) தொடர்பான மோதல்களைக் குறைத்து, புதிய வர்த்தக ஒப்பந்தம் அல்லது தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றங்கள், தைவான் விவகாரம் மற்றும் ரஷ்யாவுடனான சீனாவின் உறவு குறித்து இரு தலைவர்களும் தீவிரமாக ஆலோசிக்க உள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையே முதலீடு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்த 'Board of Trade' போன்ற புதிய அமைப்புகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அமைதி பேச்சுவார்த்தை! ஈரான் மீதான போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்தார் அதிபர் டிரம்ப்!

இந்தச் சந்திப்பு வெறும் அடையாளப்பூர்வமானது மட்டுமல்ல, அமெரிக்க மக்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில் பல 'நல்ல டீல்கள்' (Good Deals) இதில் இடம்பெறும்" என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா-சீனா உறவில் நிலவும் விரிசலைச் சரிசெய்து, உலகப் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவர இந்தப் பயணம் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அமெரிக்க அதிபரை சாடிய பிரேசில் அதிபர்! ஆயுத போட்டியால் சுற்றுச்சூழல் அழியும் என எச்சரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share