ஈரான் தனது காவல்படை மூலம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகத்தை தாக்கியதாக அறிவித்துள்ளது. இந்த தாக்குதல் கேய்பர் ஷெகன பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்டதாகவும், இஸ்ரேலின் வான் படை தளபதியின் இருப்பிடமும் இதே தாக்குதலில் குறிவைக்கப்பட்டதாகவும் IRGC அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மத்திய கிழக்கில் ஏற்கனவே உச்சக்கட்டத்தில் உள்ள போர் பதற்றத்தின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது பெரிய அளவிலான தாக்குதலைத் தொடங்கின. இதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா அறிவித்தன. ஈரான் இதை உறுதிப்படுத்திய பின்னர், பதிலடியாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் பல இலக்குகளை நோக்கி ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியது.

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் பதற்றம் தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தை மிகுந்த அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள ஒரு உச்சகட்ட நிலையை எட்டியுள்ளது. இது வெறும் பதற்றம் அல்ல., அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தொடங்கிய பெரிய அளவிலான இராணுவத் தாக்குதல்களால் முழு அளவிலான போராக மாறியுள்ளது.
இதையும் படிங்க: அத்துமீறும் ஈரான்..!! எதிர்க்க நாங்க தயார்..!! பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் கூட்டறிக்கை..!!
இந்தப் போரின் விளைவாக உலக அளவில் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இஸ்ரேல் பிரதமர் நிதன்யாஹு அலுவலகத்தை ஈரானின் ஏவுகணை தாக்கியதாக முதற்கட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை குறிவைத்து கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தகவல் தெரிவித்துள்ளது. ஈரானின் புரட்சி படை நடத்திய தாக்குதலை அடுத்து இஸ்ரேல் பிரதமரின் நிலை என்ன என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. இஸ்ரேல் விமானப்படை தளபதியின் இருப்பிடம் ஏதும் தாக்குதல் நடத்தை இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: ஈரானின் தொடர் தாக்குதல்..!! சவுதி அரேபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தற்காலிக மூடல்..!!