வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
உலகம்

அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த அடி! போர் முடிந்து முதன்முறை வாய் திறந்த காமெனி..

அமெரிக்காவை ஈரான் வென்றதற்கு எனது வாழ்த்துகள். இஸ்ரேல் முற்றிலும் அழிந்துவிடும் என்று உணர்ந்ததால் தான் போரில் அமெரிக்கா நேரடியாக நுழைந்தது என காமெனி தெரிவித்தார்.

அணு ஆயுத தயாரிப்பை கைவிட மறுத்து வந்த ஈரான் மீது பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி கடந்த 13ம் தேதி இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. ஈரானின் ராணுவ மையங்கள், அணு ஆயுத கூடங்களை குறி வைத்து அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசியது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலில், ஈரானின் பல ராணுவ தளபதிகள், பல அணு விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டனர்.

பதிலுக்கு ஈரானும்  இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ஒரு வாரமாக போர் தொடர்ந்த நிலையில், ஞாயிறன்று ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் குதித்தது.

ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் அணு உலைகள் மீது அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தின. அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக செவ்வாயன்று இரவு கத்தார் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணைகளை வீசியது.

இதையும் படிங்க: இஸ்ரேல் – ஈரான் போர் முடிந்தும் காமெனி மிஸ்ஸிங்? உச்ச தலைவரை காணோம்..! ஈரானியர்கள் பதற்றம்..!

இதனால் மத்திய கிழக்கில் நிலவி வந்த பதட்டம் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், புதனன்று இஸ்ரேல் – ஈரான் போர் முடிவுக்கு வந்தது. போர் முடிவு பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததை முதலில் நிராகரித்த ஈரான், பின்னர் அதிகாரப்பூர்வமாக போர் நிறுத்தத்தை அறிவித்தது. தாக்குதல் தொடங்கிய 13ம் தேதியே ஈரானின் உச்ச தலைவர் கமெனியும் அவரது குடும்பத்தினரும் அவசர அவசரமாக ரகசிய இடத்துக்கு மாற்றப்பட்டனர். 

போர் முடிந்து 3 நாட்களாகியும் கமெனி பற்றிய தகவல் இல்லாததால் அவர் எங்கே என மக்கள் கேட்க தொடங்கி விட்டனர். இந்த சூழலில் தான் போர் தொடர்பாக கமெனி தனது முதல் பதிவை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவை ஈரான் வென்றதற்கு எனது வாழ்த்துகள். இஸ்ரேல் முற்றிலும் அழிந்துவிடும் என்று உணர்ந்ததால் தான் போரில் அமெரிக்கா நேரடியாக நுழைந்தது.

அந்த ஆட்சியை காப்பாற்றும் முயற்சியாகவே போரில் நுழைந்தாலும், அது எதையும் சாதிக்கவில்லை. அமெரிக்காவின் முகத்தில் ஈரான் மிகப்பெரிய அடியை கொடுத்திருக்கிறது. கத்தாரில் உள்ள முக்கிய அமெரிக்க ராணுவ தளத்தையே தாக்கி உள்ளோம்.இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அமெரிக்காவின் முக்கியமான மையங்களை ஈரானால் அணுக முடியும் என்பதும், தேவை என்றால்  தாக்க முடியும் என்பதும் தான். 

இதுபோன்ற தாக்குதல் எதிர்காலத்தில் மீண்டும் நடக்கலாம். ஏதாவது ஆக்கிரமிப்பு ஏற்பட்டால், எதிரி நிச்சயம் அதிக விலை கொடுக்க நேரிடும் என்றும் கமெனி எச்சரித்துள்ளார்

இதையும் படிங்க: 3வது உலகப்போர் துவங்கி இருக்கும்.! இந்தியா – பாக்., ஈரான் – இஸ்ரேல் போர் ரகசியங்களை உடைக்கும் ட்ரம்ப்..

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी