வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
உலகம்

இஸ்ரேலை சிதைத்து விடுவோம்… ஈரானுடன் கைகோர்த்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்!

ஈரானுடன் இணைந்து இஸ்ரேலை தாக்குவோம் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

இஸ்ரேலின் BAT YAM நகரை குறி வைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. குடியிருப்புகளை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. ஈரான் தாக்குதலில் இஸ்ரேல் குடியிருப்புகள் சிதிலமடைந்து காட்சியளிக்கும் ட்ரோன் காட்சிகள் வெளியாகி உள்ளது. ஈரான் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரான் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஈரானுடன் இணைந்து இஸ்ரேலை தாக்குவோம் என ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். பாலிஸ்ட்டிக் ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மதிய இஸ்ரேலை குறி வைத்து ஹவுதி அமைப்பினர் தாக்குதல் நடத்தியிருந்தனர். சவுதி அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இனிவரும் நாட்களில் ஈரானுடன் இணைந்து தாக்குதலை நடத்தப் போவதாக ஹவுதி குழுவினர் அமைத்துள்ளனர்.

இதையும் படிங்க: சீண்டிய இஸ்ரேல்.. சீறிய ஈரான்..! மத்திய கிழக்கில் போர் பதற்றம்..!

இதனிடையே, ஈரான் ராணுவ தளத்திற்கு அருகில் இருக்கும் மக்களுக்கு பாரசீக மொழியில் எச்சரிக்கை வெளியிட்டது இஸ்ரேல். ஈரானில் ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு திரும்ப வேண்டாம் என்று இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஈரான் அணு உலை மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. கசிகிறதா அணுகதிர்வீச்சு? மக்கள் அச்சம்!!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी