தென்னிந்தியத் திரையுலகம் இன்று ஒரு பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நானூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, தனக்கெனத் தனியிடம் பிடித்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி தனது 94-ஆவது வயதில் சென்னையில் காலமானார்.
வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைவால் சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இறுதியில் உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி வெளியானதும் திரையுலகமும் ரசிகர்களும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்ந்தனர். அந்தத் துயரத்தின் நடுவே, உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்ட இரங்கல் செய்தி பலரையும் உருகச் செய்தது.

கமல்ஹாசன் தனது சமூக ஊடகப் பக்கத்தில் எழுதிய செய்தியில், “தென்னிந்தியத் திரையின் தவிர்க்கவியலாத நடிப்புக் கலைஞர் சௌகார் ஜானகி; அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது. கண்ணீரோடு வழியனுப்புகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். அவரது வார்த்தைகள் வெறும் வழக்கமான இரங்கல் அல்ல. நீண்ட கால நெருக்கமும், ஆழ்ந்த மரியாதையும் கலந்த உணர்ச்சி வெளிப்பாடாக இருந்தன.
இதையும் படிங்க: "வாய்ப்பில்ல ராஜா"..! அதிமுகவுடன் கூட்டணியா..? கனிமொழி பளீச் பதில்..!!
கமல்ஹாசன் மேலும் கூறுகையில் “பார்த்தாலே பசி தீரும் என்ற படத்திலிருந்து தொடங்கி நான்கு தசாப்தங்களாகப் பல படங்களில் நாங்கள் இணைந்து பணியாற்றினோம். அவர் அம்மா, நான் குழந்தை. தென்னிந்தியத் திரையின் தவிர்க்க முடியாத நடிப்புக் கலைஞர் சௌகார் ஜானகி. அக்காலத்து எல்லா நாயகர்களுடனும் அவர் நடித்திருக்கிறார். தென்னிந்தியத் திரையின் தவிர்க்கவியலாத நடிப்புக் கலைஞர் சௌகார் ஜானகி என்று உருக்கமாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்தவரே கலைஞர் தான்..! கனிமொழி MP சுதந்திர தின வாழ்த்து..!