தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி சட்டமன்றத் தொகுதி பெறுகிறது. இதன் காரணமாக அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு உள்ளனர். திமுகவை பொருத்தவரை முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உட்பட அனைத்துக் கட்சி பிரமுகர்களும் வாக்கு சேகரிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அந்தந்த தொகுதியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நிலையில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்ட போது எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பது குறித்து விமர்சனம் செய்தார். அதிமுக துரோகம் செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். தமிழ்நாட்டுக்கு அதிமுக துரோகம் செய்வது என்றும் யார் அதிகம் துரோகம் செய்வது என்பது தான் அதிமுகவின் இடையே இருக்கும் போட்டி என்றும் கூறினார்.
இதையும் படிங்க: எதுவும் தேறாதுன்னு தெரிஞ்சு கீழ்த்தரமாக விமர்சிக்கும் இபிஎஸ்..!! பரப்புரையில் கனிமொழி குற்றச்சாட்டு..!
மத்திய அமைச்சர் அமித் ஷா சொன்னால் எடப்பாடி பழனிச்சாமி ஹிந்தியை கூட கற்றுக் கொள்வார் என்று தெரிவித்துள்ளார். இந்த சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் இடையேயான தேர்தல் என்றும் தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகளின் நிலைமை என்னவென்று தாங்கள் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமியை ஏதாவது ஒரு மாநிலத்திற்கு ஆளுநராக வேண்டுமானால் பாஜக அனுப்பி வைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இபிஎஸ் ஒரு துரோகி..! சசிகலாவையே ஒதுக்கியவர்..!! கனிமொழி கடும் குற்றச்சாட்டு..!!