மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழ் மொழி என்பது பழங்காலத்தில் இருந்து இன்றுவரை மக்களால் பயன்பாட்டில் உள்ள ஒரு பழமையான மொழி என்று தெரிவித்தார். ஆனால், சமஸ்கிருதம் பொதுவான பயன்பாட்டில் உள்ள மொழி அல்ல என்றும் இருப்பினும் மத்திய அரசு சமஸ்கிருதத்திற்கு அதிக அளவில் நிதி ஒதுக்கி வருவதாகவும் குறிப்பிட்டு பேசினார்.
மகாராஷ்டிராவில் ஹிந்தி போன்ற மொழிகளை மக்கள் ஏற்றுக் கொள்வது மாநில மொழியான மராத்தியின் முக்கியத்துவத்தை குறைக்க வழி வகுத்தது என்று குறிப்பிட்டு பேசிய கனிமொழி, தமிழ்நாட்டில் அத்தகைய நிலை இல்லை என்றும் ஹிந்தி திணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது பெரும் போராட்டங்கள் வெடித்ததாகவும் தெரிவித்தார். இதன் காரணமாகவே தமிழ் மொழி மட்டுமல்ல, அதன் கலாச்சாரம் மற்றும் மரபுகளும் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

சந்திரனுக்கு முதலில் சென்றது யார் என்று குழந்தைகளைக் கேட்டால், அவர்கள் நீல் ஆம்ஸ்ட்ராங் என்று கூறுவார்கள் என்றும் இருப்பினும், சில வடநாட்டுத் தலைவர்கள், நமது நாட்டுப்புறக் கதைகளில் வரும் பாட்டி அல்லது ஹனுமான் கூட அங்கு முதன்முதலில் கால் பதித்ததாகக் கூறலாம் எனவும் விமர்சித்தார். அதிர்ஷ்டவசமாக, அத்தகையவர்கள் தமிழ்நாட்டில் தலைமைப் பதவிகளில் இல்லை என்றும் பண்டைய காலங்களில் கூட, தமிழர்கள் போர்களில் வென்றபோது, அவர்கள் அந்த நிலத்தின் மக்களையோ அல்லது அவர்களின் கலாச்சாரத்தையோ ஒருபோதும் அழிக்கவில்லை., ஆதிக்கம் செலுத்தும் எண்ணம் தமிழர்களிடையே ஒருபோதும் இருந்ததில்லை என கூறினார்.
இதையும் படிங்க: மணிப்பூர் சென்ற பிரதமர் மோடி.. விமர்சித்த திமுக எம்.பி கனிமொழி..! பரபர பதிவு..!!
இதனிடையே, இந்தியாவின் விண்வெளி சாதனைகளை கொண்டாடும் தேசிய விண்வெளி நாள் நிகழ்ச்சியின் போது பாஜக மூத்த தலைவரும் ஹிமாச்சல பிரதேசத்தின் உனா தொகுதி எம்பியுமான அனுராதாக்கூர் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். அப்போது நிலவில் முதன் முதலில் கால் பதித்தது யார் எனக் கேட்க, மாணவர்கள் ஒருமித்த குரலில் நீல் ஆம்ஸ்ட்ராங் என்று தெரிவித்தனர். அப்போது விண்வெளிக்கு முதலில் சென்றவர் அனுமன் என தனக்கு தோன்றுவதாக பேசி இருந்தார். இதற்கு கனிமொழி எம்பி உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கனிமொழிக்கு "பெரியார் விருது"... அண்ணனிடம் ஆசி பெற்று மகிழ்ந்த தங்கை..!