நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம், தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இப்படம் 1960களில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்களை மையப்படுத்திய வரலாற்று அரசியல் நாடகமாக உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் ஒரு கல்லூரி மாணவராக நடித்துள்ளார், அவருடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம், டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டதில் இருந்தே சில சர்ச்சைகள் எழுந்தன. படத்தின் மிகப்பெரிய சிக்கல் தணிக்கை வாரியத்தில் ஏற்பட்டது. நீண்ட இழுத்தடிப்பு செய்த பிறகு தணிக்கை சான்று கிடைத்த நிலையில் பராசக்தி திரைப்படம் வெளியாகியது.

பராசக்தி படம் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. இதற்கிடையில், பராசக்தி படம் காங்கிரசை விமர்சிப்பதாக கார்த்தி சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் ஆவேசமாக பதிலளித்தார். திரைப்படத்தை வைத்து தமிழ்நாட்டின் அரசியலை நிர்ணயம் செய்யலாம் என்று நினைத்தால் அது தவறு என்று கூறினார். பராசக்தி படம் மட்டுமல்ல., எந்த படத்தை பார்த்தாலும் தமிழ்நாட்டு அரசியலை மாற்ற முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஷயமே வேற..! பராசக்தி படத்தில் கருத்து முரண்பாடு... குண்டை தூக்கி போட்ட MP விஜய் வசந்த்..!
பராசக்தி படம் பொழுதுபோக்கு படம் தானே என்ற கேள்வி எழுப்பிய கார்த்தி சிதம்பரம், அது என்ன ஆவண படமா என்று கேள்வி எழுப்பினார். அதனால் எந்த மாற்றமும் நிகழாது என்று திட்டவட்டமாக கூறினார். பராசக்தியோ, ஜனநாயகனோ.. இரண்டு படத்தையும் தன் பார்க்க போவதில்லை என்று கூறினார்.
இதையும் படிங்க: நான் சுட்டிப்பையன்… கொட்டும் மழையில் மாணவர்களுடன் கலகலப்பாக கலந்துரையாடிய ராகுல் காந்தி…!