தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உற்சாகத்துடன் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வந்தார். கரூரில் சுற்றுப்பயணம் செய்த விஜய் உற்சாகத்துடன் வரவேற்க காத்திருந்தனர். தொண்டர்களின் இந்த உற்சாகம் சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை. இந்த பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் 110 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக விசாரிக்க தனிநபர் ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். கரூர் சம்பவம் எதேர்ச்சையாக நடைபெறவில்லை என்றும் அரசியல் கட்சியினரின் தலையிட இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. கரூர் சம்பவத்தை தமிழக அரசு விசாரிக்கக் கூடாது என்றும் சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இது தொடர்பான விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் சிபிஐ விசாரணை கேட்கட்டும் என்றும் உங்கள் அரசியலுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர். விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளதால் மனுக்களை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கரூர் மக்களுக்கு விஜய் மேல எந்த கோபமும் இல்ல.. அத அவங்களே சொல்லிட்டாங்க..!! அருண்ராஜ் தகவல்..!
SIT குழுவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக்கழகம் தொடர்ந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. SIT அமைத்த உத்தரவை எதிர்த்த வழக்கு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்குகள் உட்பட 4 வழக்குகள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.கே. மகேஸ்வரி, SIT விசாரணையில் இருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும் ஒரு SIT அமைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: கரூர் துயரச் சம்பவம்: நிர்வாக அலட்சியமே முழு காரணம்.. பாஜக எம்.பி.க்கள் குழு அறிக்கை?