கிட்னி முறைகேடு தொடர்பாக விவாதிக்கக்கோரி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். கிட்னி முறைகேடு தொடர்பாக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில் அளித்து பேசினார்.
கிட்னி முறைகேடு குறித்து வந்த செய்தியை அறிந்த உடனேயே முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாக தெரிவித்தார். முதல்வர் உத்தரவின் பேரில் குழு அமைக்கப்பட்ட உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டது எனக் கூறினார். அரசின் குழு பள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதி மருத்துவமனைகளில் ஆய்வு செய்து முறைகேடு நடந்ததை உறுதி செய்ததாக தெரிவித்தார்.

சட்ட நுணுக்கங்களை தவறாக பயன்படுத்தி கிட்னி மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ய தடை செய்யப்பட்டதாகவும் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டதாகவும் கூறினார். ஏழைகளின் கிட்னியை திருடிய மருத்துவமனை மீது திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என இபிஎஸ் கருத்து கூறியதற்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார் தானம் எனும் பெயரில் உடல் உறுப்பை விற்கக் கூடாது என ஆட்சியர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான ஆவணங்கள் 10 ஆண்டுகள் வரை பராமரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்திக்கு எதிராக சிறப்பு மசோதா - இரவோடு, இரவாக ஸ்டாலின் வீட்டில் நடந்த அவசர மீட்டிங்...!
அனைத்து ஆவணங்களும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சென்னை, மதுரை, கோவை உட்பட நான்கு அரசு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான அங்கீகார குழு செயல்படுகிறது என்றும் கிட்னி மோசடி தொடர்பாக இடைத்தரகர்கள் இருவரும் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கிட்னி மோசடி தொடர்பாக அரசு அலுவலர்கள் 7 பேர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.
இதையும் படிங்க: யாரையும் பலிகடா ஆக்குற அவசியம் எங்களுக்கு இல்ல... பொறுப்பா இருங்க - முதல்வர் ஸ்டாலின்...!