2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் நேற்று காலை தொடங்கியது. தமிழக சட்டமன்றத்தின் 2026-ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்குச் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள பேரவை மண்டபத்தில் தொடங்கியது.
இந்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் ரவி தனது உரையை நிகழ்த்துவார் என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அது ஏமாற்றத்தில் தான் முடிந்தது. தமிழ்த்தாய் வாழ்த்து உடன் சட்டப்பேரவை கூடிய நிலையில் நான்காவது ஆண்டாக ஆளுநர் உரையை படிக்காமல் வெளிநடப்பு செய்தார். இதைத்தொடர்ந்து அதிமுகவினரும் வெளிநடப்பு செய்திருந்தனர்.

இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டம் நேற்று நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த கூட்டத்தொடரில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் முன்னிலையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 3 வது நாளாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்றைய கூட்டத்தொடரில் கேள்வி நேரம் நடந்து வருகிறது.
இதையும் படிங்க: அரசே பாவம்..! பொங்கல் பரிசு தொகையை அரசுக்கு திருப்பி அனுப்பிய சமூக ஆர்வலர்..!
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் அமைச்சர் கே. என் நேரு விளக்கம் அளித்தார். ஊத்துக்கோட்டை பேரூராட்சியை தரம் உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் அரக்கோணத்தை தேர்வு நிலை நகராட்சியாக உயர்த்தவும் பரிசீலனை செய்யப்படுகிறது என்றும் தெரிவித்தார். செம்பரம்பாக்கத்தில் கூடுதலாக 250 எம் எல் டி தண்ணீர் திறக்கப்படும் என்றும் கூடுதல் தண்ணீரை நகரங்களுக்கு திருப்பிவிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தொடரும் துயரம்... எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மயிலாடுதுறை மீனவர்கள் 7 பேர் கைது..!