கும்பகோணம் மாநகராட்சி கூட்ட அரங்கில் முதல்வர் விஜய் படம் மட்டும் வைக்கப்பட்டிருந்த நிலையில், திமுக உறுப்பினர்கள் முன்னாள் முதல்வர்கள் கலைஞர் மற்றும் ஸ்டாலின் படங்களை கூட்ட அரங்கில் மாட்டினர். இதனைத் தொடர்ந்து இரண்டு உறுப்பினர்கள் கொண்ட அதிமுக உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமி படத்தை மாட்டினர் . இதற்கிடையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் காமராஜர் படத்தை கூட்ட அரங்கில் போட்டி போட்டு மாட்டியதால் பரபரப்பு இதற்கிடையில் செய்தியாளர்களுக்கு உரிய நாற்காலி ஒதுக்காததால் தரையில் அமர்ந்து செய்தி சேகரித்த செய்தியாளர்களால் பரபரப்பு .
48 உறுப்பினர்கள் கொண்ட கும்பகோணம் மாநகராட்சியில் திமுக 39 உறுப்பினர்களையும் அதிமுக இரண்டு உறுப்பினர்களையும், காங்கிரஸ் கட்சி இரண்டு உறுப்பினர்களையும், சிபிஐ, விசிக ,மதிமுக, தவெக , ஆகிய கட்சிகள் தலா ஒரு உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.
திமுகவை சேர்ந்த ஒரு உறுப்பினர் இறந்ததால் அந்த இடம் காலியாக உள்ளது.
இந்நிலையில் இன்று தேர்தலுக்குப் பிறகு மாமன்ற கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி சேர்ந்த மேயர் சரவணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது . கூட்ட அரங்கில் தமிழக முதல்வர் விஜய் படம் மட்டும் மாட்டப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் கையில் கொண்டு வந்த கலைஞர் மற்றும் ஸ்டாலின் படங்களை மாட்டினர். இதனைப் பார்த்த அதிமுக உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமி படத்தை மாட்டினர் .
இதையும் படிங்க: "இணைந்து போராடுவோம்"..! பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி..!
இரண்டு காங்கிரஸ் கட்சி சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் ஒருவர் மேயர் என்ற நிலையில் மற்றொரு உறுப்பினர் காமராஜர் படத்தை கூட்ட அரங்கில் மாட்டினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது இதற்கிடையில் மாமன்ற கூட்டம் தொடர்பான செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்கள் அமர இடம் இல்லாததால் தரையில் அமர்ந்து செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர் .
இதனைப் பார்த்து திமுக உறுப்பினர்கள் செய்தியாளர்களுக்கு நாற்காலி ஏற்பாடு செய்து தரும்படி கூறினர். இதனை தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் நாற்காலிகளைக் கொண்டு வந்தனர். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் சற்று சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது .
கூட்டம் நிறைவு பெற்றதும் திமுக உறுப்பினர்கள் ஸ்டாலின் உருவப்படத்தை கைகளில் ஏந்தியவாறு நான் முதல்வன் திட்டத்தை கொண்டு வந்த ஸ்டாலின் வாழ்க,
மகளிர் உரிமைத் தொகை வழங்கிய ஸ்டாலின் வாழ்க என முழக்கங்கள் எழுப்பியவாறு கலைந்து சென்றனர் .
இதையும் படிங்க: தவெக - பாஜக இடையே ரகசிய உடன்பாடு..? எப்ப பேசுவாரு முதல்வர் விஜய்..? உதயநிதி சரமாரி கேள்வி..!