செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் எம் சாண்ட் ஏற்றி வந்த லாரி ஒன்று சாவியுடன் நிறுத்தப்பட்டிருந்தது. பாஸ்ட் டாக் கட்டணம் செலுத்துவதற்காக ஓட்டுநர் சென்றிருந்த நிலையில் அதனை சுதாரித்துக் கொண்ட மது போதையில் இருந்த நபர் ஒருவர் லாரியை எடுத்துச் சென்றுள்ளார்.

போதையில் இருந்த மர்ம நபர் லாரியை கடத்திச் சென்றதைக் கண்டு அருகில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போக்குவரத்து காவலர்கள் உஷார் படுத்தப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது போக்குவரத்து சிறப்பு காவல் ஆய்வாளர் பாலமுருகன் என்பவர் லாரி பிடித்து தொங்கியபடிச் சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் பொதுமக்களும் பின்தொடர்ந்து சென்று போலீசார் உடன் சேர்ந்து லாரியை பிடித்தனர்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் ஈரோடு இரட்டை கொலை வழக்கு.. முக்கிய குற்றவாளிகளை தட்டி தூக்கிய போலீஸ்..!

விபத்து ஏற்படுத்திய லாரியை இளைஞர்களும் இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்று மீட்டு உள்ளனர். கடத்தப்பட்ட லாரி நீக்கப்பட்ட நிலையில் மது போதையில் இருந்த நபரை போலீசார் பிடித்துச் சென்றனர். இதனால் அப்பகுதிகள் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: “லிஸ்ட் தயார்” அதிமுகவிற்கு காத்திருக்கும் அதிர்ச்சி வைத்தியம்... தமிழக பாஜகவின் பலே திட்டம்...!