மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். தாராபுரத்தில் முதல் ஆளாக திமுக வேட்பாளர் சுகன்யா தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்கு எண்ணிக்கை வரும் 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
மதுராந்தகம் தொகுதி:
மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் 2,13,788 வாக்காளர்கள் உள்ளனர். மதுராந்தகம் தொகுதியில் 167 மையங்களில், 285 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. . தாராபுரத்தில் மொத்தம் 2,22,406 வாக்காளர்கள் உள்ளனர். தாராபுரம் தொகுதியில் மொத்தம் 186 மையங்களில் 320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாளை தாராபுரம்-மதுராந்தகம் இடைத்தேர்தல்..!! 3 கட்சிகளின் அரசியல் சோதனை..!! நடக்கப்போவது என்ன..?? ஓர் அலசல்..!!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியம் ஆனார். இதையடுத்து காலியாக இருந்த அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் தவெக சார்பில், பதவியை ராஜினாமா செய்துவிட்டு சென்ற மரகதம் குமரவேலுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
திமுக சார்பில் பரந்தாமனும், அதிமுக சார்பில் கணிதா சம்பத்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமனும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி என்பவரும் வேட்பளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால் மதுராந்தகத்தில் ஐந்து முனை போட்டி நிலவுகிறது. மதுராந்தகம் தொகுதியில் 285 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று வாக்குச்சாவடிக்கு அனுப்பப்பட்டது. வாக்குப்பதிவு எந்திரங்களை ஏற்றிச்செல்லும் ஒவ்வொரு வாகனங்களும், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. இடைத்தேர்தலுக்காக மதுராந்தகத்தில் 2 ஆயிரத்து 614 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மத்திய ஆயுதப்படை போலீசார் 480 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் 2,13,788 வாக்காளர்கள் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மதுராந்தகம் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில், கள்ளபிரான்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள எண் 72 வாக்குச்சாவடி, முழுமையாக பெண்களுக்கான வாக்குச்சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது.
தாராபுரம் இடைத்தேர்தல்:
தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்யபாமா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். இதையடுத்து காலியாக இருந்த தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு கடந்த மாதம் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியானது. இதன்படி, தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபற உள்ளது. தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பாக சத்யபாமா, திமுக சார்பாக சுகன்யா, அதிமுக சார்பாக பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பாக கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக லட்சுமனண் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தாராபுரத்தில் ஐந்து முனை போட்டி நிலவுகிறது.
தாராபுரத்தில் முதல் ஆளாக திமுக வேட்பாளர் சுகன்யா தனது வாக்கினை பதிவு செய்தார். தளவாய்பட்டினத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.
320 வாக்குச்சாவடிகள்:
எனினும், ஆளும் தவெக, திமுக, அதிமுக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு சென்ற எம்.எல்.ஏக்கள் என்பதால் இந்த தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று தவெகவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. தாராபுரத்தில் மொத்தம் 2 லட்சத்து 22 ஆயிரத்து 406 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 875 பேர் ஆண் வாக்காளர்கள் ஆவர். 1 லட்சத்து 15 ஆயிரத்து 523 பேர் பெண் வாக்காளர்கள் ஆவர். 8 பேர் மூன்றாம் பாலினத்தவர்.
தாராபுரம் தொகுதியில் மொத்தம் 186 மையங்களில் 320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 18 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அதில் கூடுதல் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தாராபுரம் தொகுதியில் மொத்தம் 1,486 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஓய்ந்தது அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம்: தாராபுரம், மதுராந்தகத்தில் அக். 6-ல் வாக்குப்பதிவு!