தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சமீபத்தில் கோவையில் பூத் கமிட்டி கருத்தரங்கம் நடத்தி இருந்தார். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த பூத் கமிட்டி கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக சென்ற விஜய்க்கு அவரது தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில் கோவை விமான நிலையம் ஸ்தம்பித்து போனது. அது மட்டுமல்லாமல் விமான நிலையத்தில் இருந்து விஜய் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு செல்லும் வழியிலும் அங்கிருந்து கருத்தரங்கிற்கு செல்லும் வழிநெடுகிலும் தொண்டர்கள் பின் தொடர்ந்து சென்றதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

விஜய்க்கு அவரது தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தாலும் பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டதாகவும் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும் விமான நிலையத்தில் பொருட்களை செய்த படுத்தியதாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: சிறுவாணி தண்ணி மாதிரி சுத்தமான ஆட்சி அமையும்.. சபதம் எடுத்த விஜய்..!

இந்த நிலையில் மதுரைக்கு படப்பிடிப்பிற்காக வரும் விஜயை காண தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். மாலை 4 மணிக்கு தான் விஜய் வரும் நிலையில் காலை முதலே தொண்டர்கள் உற்சாகத்தில் குவிந்துள்ளனர். இதனால் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அசௌகரியமாக உணரும் சூழல் ஏற்பட்டது.

தனிப்பட்ட காரணங்களுக்காக விஜய் மதுரைக்கு செல்வதால் அவருக்கு வரவேற்பு அளிக்க வேண்டாம் என கட்சி நிர்வாகிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தி இருந்த நிலையில் விஜய்யை காண தொண்டர்கள் குவிந்துள்ளதால் மதுரை விமான நிலையமே ஸ்தம்பித்துப் போய் உள்ளது.
இதையும் படிங்க: தலைவர பாத்தே ஆகணும்..! பவுன்சர்களுடன் மல்லுக்கட்டும் தவெக தொண்டர்கள்..!