பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்கவும், சேவைகளை மக்களின் நிலங்களுக்கு நேரடியாகக் கொண்டு சேர்ப்பதும் முக்கிய நோக்கமாக கொண்டு உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அரசின் திட்டங்கள் மக்களை உடனடியாக செல்லும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வரின் முகவரி திட்டத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோரின் குறைகள் சரி செய்யப்பட்டுள்ளதாகவும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் விடுபட்டவர்கள் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டது.
மேலும், நகர்ப்புறங்களாக இருந்தால் 13 துறைகள் மூலமாக 43 சேவைகள் வழங்கப்பட உள்ளதாகவும், சிலவற்றை ஓரிரு நாளிலும் அதிகபட்சமாக 45 நாளிலும் சேவைகள் சரி செய்து கொடுக்கப்படும் என்றும் கிராமப்புறங்களில் 15 துறைகள் மூலமாக 46 சேவைகள் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது.
பத்தாயிரம் மக்கள் தொகைக்கு ஒரு முகாம் என்ற அடிப்படையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், முதல் கட்டமாக 3563 முகங்கள் நடக்க திட்டமிட்டுள்ளதாகவும், வாரத்திற்கு நான்கு நாட்கள் முகாம்கள் நடைபெறும் என்றும் இதற்காக பிரத்தியேக வலைத்தளம் ஒன்றும் செயல்பாட்டுக்கு வரும் தெரிவிக்கப்பட்டது. இந்த முகாம்கள் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி என வாரத்திற்கு நான்கு நாட்கள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. நான்கு ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவையும் அரசு செய்தி தொடர்பாளர்களாக நியமித்தனர்.
இதையும் படிங்க: பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் துணையா? SIR- க்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அமைச்சர் கே.என் நேரு..!

மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்குவதற்காக உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடங்கப்பட்டு இருந்தாலும் கூட, பள்ளிகளில் முகாம்கள் நடைபெறுவதால் இடையூறு ஏற்படும் என குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் குமணந்தாங்கலில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமை அமைச்சர் துரைமுருகன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவரிடம், அரசுப் பள்ளியில் முகாம் நடைபெறுவதால் மாணவர்களின் படிப்புக்கு இடையூறு ஏற்படுமே என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விடுமுறை முடிந்த பள்ளி திறக்கப்பட்டுள்ளதால் ஒரு நாளில் ஒன்றும் ஆகிவிடாது என்று அலட்சியமாக பதிலளித்தார். அமைச்சரின் அலட்சிய பதிலால் அருகிலிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க: விஜய் சொல்லிட்டாரு... கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் இழப்பீடு...!