அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் முழுமையாக கொள்முதல் செய்யவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். சாலைகளில் நெல்லை கொட்டி வைத்து 20 நாட்களாக விவசாயிகள் காத்திருப்பதாகவும் தற்போது நெல்மணிகள் அனைத்தும் முளைத்து இருப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளதாகவும் கூறினார்.
விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி, தஞ்சாவூர் காட்டூரில் மட்டும் 4000 நெல் மூட்டைகள் சாலைகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம் வடுவூரில் 7500 மூட்டைகள் இன்னும் கொள்முதல் செய்யவில்லை என்று தெரிவித்தார்.

நாள் ஒன்றுக்கு 800 முதல் 900 நெல் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாகவும் தெரிவித்த அவர், அதிமுக ஆட்சியில் ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டதாகவும் நாள் ஒன்றுக்கு 2000 மூட்டைகள் கொள்முதல் செய்வதாக அமைச்சர் பொய் சொல்வதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி இருந்தார். ஏற்கெனவே சட்டமன்றத்திலும் நெல் கொள்முதல் விவகாரத்தில் திமுக அரசை எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டி இருந்தார்.
இதையும் படிங்க: கண்ணீர் விட்டு கதறும் விவசாயிகள்... கையாலாகாத அரசு...! விளாசிய இபிஎஸ்...!
இதனிடையே, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பொய் சொல்வதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கூறியுள்ளார். நெல் கொள்முதலில் முதல்வர் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் நாளொன்றுக்கு 600 முதல் 700 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட்டதாகவும் இப்போது 1,000 மூட்டைகள் வாங்கப்படுகிறது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: EPS சொல்றது சுத்தப் பொய்... விவசாயிகளுக்கு இதை செஞ்சிருக்கோம்... அமைச்சர் சக்கரபாணி விளக்கம்...!