துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பதவியேற்றுள்ள சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்றார். நேற்று மதியம் சிபி ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து இபிஎஸ் கலந்துரையாடினார். பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுகவின் உட்கட்சி பிரச்சனையான செங்கோட்டையன் பிரச்சனை உள்ளிட்டவை குறித்து விவாதித்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் நடந்த கலந்துரையாடல் தொடர்பாக கேட்டபோது, அவர் முகத்தை மூடிக்கொண்டு சென்று விட்டதாக தகவல்கள் பரவின. இதற்கு அதிமுக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. முகத்தை துடைப்பதை, முகத்தை மூடிக்கொண்டு செல்வதாக Fake Narative செட் பண்ணும் வேலையில் திமுக ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளது. எடப்பாடியார் ஒன்றும் ஆட்சிக்கு வருவதற்கு முன் கருப்பு பலூனை பறக்க விட்டு, ஆட்சிக்கு வந்த பின் வெள்ளை குடையுடன் செல்லவில்லை என்று தெரிவித்துள்ளது.

வெளிப்படையாக உள்துறை அமைச்சரை சந்திக்க சென்றார் என்பது நாடறியும் எனவும் சந்திப்பு முடிந்ததும் முகத்தை மூடிக்கொண்டு செல்லும் அவசியம் அவருக்கில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து, ஆட்சிக்கு வந்த பின் எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றாத நீங்கள் தான் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என்றும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க முடியாமல் சிறுவர் முதல் கிழவி வரை நடமாட பயப்படும் நிலையை உருவாக்கிய நீங்கள் தான் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என்றும் விமர்சித்துள்ளது.
இதையும் படிங்க: நீங்க எப்படிப்பட்டவர் தெரியுமா? அர்ப்பணிப்பு, உறுதிப்பாடு... பிரதமரை வாழ்த்து மழையில் நனைய வைத்த EPS
தேர்தல் வருகிற நிலையில் மக்களை எதிர்கொள்ள முடியாமல் நீங்கள்தான் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என்றும் சந்திப்பின் நிகழ்வுகளை எடப்பாடியார் விபரிக்கும் போது நீங்கள் முகத்தை மறைத்து திருப்பிக் கொண்டுதான் செல்ல வேண்டும் என்றும் தலைகுனிய வேண்டியது திமுக தான் என்றும் கூறியுள்ளது.
இதையும் படிங்க: அமித் ஷா அப்படி என்ன சொல்லிட்டாரு... காஸ்ட்லி காரில் முகத்தை மூடியபடி எஸ்கேப் ஆன எடப்பாடி ...!