வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

என்னப்பா நிலவரம்? ஜெர்மனியில் இருந்தவாறு சென்னை மழை குறித்து கேட்டறிந்த முதல்வர்

ஜெர்மனி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை மழை நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

சென்னையில் நேற்று இரவு ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக கொட்டிய கனமழை, நகரையே குளிர்வித்து, அதே சமயம் பலத்த சவால்களையும் எழுப்பியது. இந்த இயற்கை நிகழ்வு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் புரட்டிப்போட்ட ஒரு இரவாக அமைந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கையை தற்காலிகமாக பாதித்தது.நேற்று மாலையிலிருந்து, சென்னையின் வானிலை மாறத் தொடங்கியது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு மற்றும் வட தமிழ்நாடு-தெற்கு ஆந்திரப் பிரதேச எல்லைப் பகுதிகளில் உருவான இடியுடன் கூடிய மழை மேகங்கள், சென்னையை நோக்கி நகர்ந்தன.

இரவு 11 மணி முதல், சென்னையின் பல்வேறு பகுதிகளான சென்னை சென்ட்ரல், புரசைவாக்கம், கிண்டி, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, எழும்பூர், அடையாறு, வியாசர்பாடி, மந்தைவெளி, மற்றும் மணலி போன்ற இடங்களில் கனமழை கொட்டத் தொடங்கியது. விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. சென்னையில் இந்த மேக வெடிப்பு, குறிப்பாக மணலி பகுதியில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியது. வானிலை மையத்தின் தகவலின்படி, மணலியில் ஒரே இரவில் 27 சென்டி மீட்டர் மழை பதிவாகியது, இது இந்த ஆண்டின் மிக அதிகபட்ச மழைப்பொழிவாகக் கருதப்படுகிறது.

மணலி நியூ டவுனில் 25 சென்டி மீட்டரும், விம்கோ நகரில் 22 சென்டி மீட்டரும் மழை பெய்ததாக பதிவாகியுள்ளது. மற்ற பகுதிகளிலும், துரைப்பாக்கத்தில் 19.5 சென்டி மீட்டர் உட்பட, கணிசமான மழைப்பொழிவு பதிவானது. கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி இயல்பு வாழ்க்கையை பாதித்தது. இந்த நிலையில், சென்னையில் நேற்று பெய்த கனமழை குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் ஜெர்மனியில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் கேட்டறிந்தார் 

இதையும் படிங்க: இனி வாட்ஸ் அப்-யிலேயே பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறலாம் – எப்படி தெரியுமா?

பெருமழை காரணமாக பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பணியாற்றிட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: வீட்டுல நாய் வளர்க்குறீர்களா? அப்போ உங்களுக்கு தான் இந்த அலர்ட்! சென்னை கார்ப்பரேஷன் கறார்

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी