தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குடியிருப்பு பகுதிகள் மற்றும் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி இருப்பதால் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. நீர் நிலைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் தண்ணீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி இருந்தார். தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி இருந்தார்.

மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது, மழை நீரை அகற்றுவது, அடிப்படை வசதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசித்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். முகாம்களை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்றும் உணவுப் பொருட்கள் தேவையான அளவு இருப்பு வைத்திருக்கவும் அறிவுறுத்தி இருந்தார்.
இதையும் படிங்க: கனமழை! மக்கள் பாதுகாப்பு முக்கியம்... திமுக மேயர்கள், கவுன்சிலர்கள், நிர்வாகிகளுக்கு தலைமைக் கழகம் அழைப்பு...!
இந்த நிலையில் இன்றைய தினம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தின் ஆட்சியர்களுடன் காணொளி காட்சி வாயிலாக கலந்துரையாடினார். மீட்பு பணிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை எந்த நிலையில் உள்ளது என்பது குறித்தும், பாதுகாப்பு பணிகளை துரிதப்படுத்தவும் அறிவுறுத்தினார். மீட்பு பணிகளை முழு வீச்சில் செயல்படுத்தவும் அறிவுத்தினார்.
இதையும் படிங்க: உடனே போங்க... NO EXCUSE... பருவமழையை எதிர்கொள்ள கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்த முதல்வர்...!