கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று அன்புடன் போற்றப்படும் முகம்மது இசுமாயில் சாகிப், இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றிலும், குறிப்பாக தென்னிந்திய முஸ்லிம் சமூகத்தின் அரசியல், கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்தில் தன்னிகரில்லாத பங்களிப்பை வழங்கிய மாமனிதர். 1896 ஜூன் 5 அன்று திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் பிறந்த இவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியின் நிறுவனத் தலைவராகவும், இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை உறுப்பினராகவும், சென்னை மாகாண சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியவர்.
இந்திய முஸ்லிம் சமூகத்தின் முக்கியத் தலைவரும், சமூக நலன் மற்றும் அரசியல் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவருமான காயிதே மில்லத்தின் 131-வது பிறந்தநாள் விழாவை தமிழ்நாடு அரசு இன்று காலை சிறப்புடன் நடத்தியது. திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள வாலாஜா மஸ்ஜித் வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் இந்த மரியாதை நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் காயிதே மில்லத் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

காயிதே மில்லத் பிறந்தநாளில் திமுக தலைவர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். தெற்கில் தோன்றி, வடக்கில் ஒளிர்ந்த “கண்ணியத் தென்றல்” காயிதே மில்லத் அவர்களின் 131-ஆவது பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றுகிறேன் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: காயிதே மில்லத்தின் 131வது பிறந்த நாள் இன்று..!! நினைவிடத்தில் முதலமைச்சர் விஜய் மரியாதை..!!
"தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும்" என அரசியல் நிர்ணய சபையில் முழங்கிய மாண்பாளர் என்றும் கல்வி வளர்ச்சிக்காக அரும்பணிகளைச் செய்த தகைமையாளர் எனவும் தெரிவித்தார். பேரறிஞர் அண்ணா காலம் தொட்டு, தேர்தல் அரசியலைக் கடந்து உருவான உறவின் உரிமையோடு, இசுலாமியப் பெருமக்களுக்கு என்றும் துணை நிற்போம் என்றும் சமூக நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாப்போம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "ஸ்டாலின் சார் யாருனு தெரியுமா?" தவெக-வுக்கு ஆ.ராசா எம்பி அனல் பறக்கும் கேள்வி!