தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள். வேட்பாளர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரும் தங்களது குடும்பத்துடன் சென்று வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனநாயக கடமையாற்றினார். சென்னை தேனாம்பேட்டையில் சித்தரஞ்சன் சாலையில் உள்ள STET கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு முதல்வர் ஸ்டாலின் உடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி கிருத்திகா ஆகியோர் வருகை தந்தனர். மக்களோடு மக்களாக குடும்பத்துடன் வரிசையில் நின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது வாக்கினை பதிவு செய்தார்.

அவரைத் தொடர்ந்து அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் வாக்கு செலுத்தினர். முதல்வர் ஸ்டாலின் உடன் வருகை தந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அவரது மனைவி கிருத்திகா மற்றும் பேரன் இன்பநிதி ஆகியோரும் வாக்கு செலுத்தினர். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தவறாது வாக்களியுங்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: விறுவிறு வாக்குப்பதிவு..! தமிழ்நாடு வெல்லும்..! வாக்கு செலுத்தியப்பின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி..!
2026 சட்டமன்றத் தேர்தலிலில் எனது வாக்கினைச் செலுத்திவிட்டேன் என்றும் தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள் எனவும் தெரிவித்துள்ளார். இன்று நீங்கள் அளிக்கப் போவது வாக்கல்ல., தமிழ்நாட்டைக் காக்க நீங்கள் ஏந்தும் கேடயம் என்று கூறிய அவர், உங்கள் வாக்குதான் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் என்றார்.
ஜனநாயகம் - மதச்சார்பின்மை - மாநில உரிமைகள் - சமத்துவம் - சமூகநீதி ஆகிய அரசியலமைப்பின் உயர்ந்த விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில் உங்களின் வாக்கு அமையட்டும் என்றும் தமிழ்நாடு வாக்களிக்கும்., தமிழ்நாடு வெல்லும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ராயபுரம் தொகுதியில் ஓட்டுக்கு 1000 ரூபாய்.? அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என குற்றச்சாட்டு..!!