தமிழ்நாடு அரசின் கல்வி மற்றும் போக்குவரத்து துறைகள் இணைந்து செயல்படுத்தும் முக்கிய நலத்திட்டங்களில், பள்ளி மாணவர்களின் போக்குவரத்து சிக்கல்களைத் தீர்க்கும் சிறப்பு பேருந்து திட்டம் முக்கிய இடம் பெறுகிறது. இந்தத் திட்டம், மாணவர்களின் பள்ளி செல்லும் செலவுகளைக் குறைக்கவும், பாதுகாப்பான மற்றும் சிறப்பான போக்குவரத்து வசதியை உறுதிப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அரசு பேருந்துகளில் இலவச பயண சலுகைகள் மூலம் தொடங்கி, சமீபத்தில் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்ட 50 சிறப்பு பேருந்துகள் வரை, இது மாணவர்களின் கல்வி அணுகலை எளிதாக்கும் ஒரு முக்கியமான அடியாக உருவெடுத்துள்ளது. பொது பேருந்துகளில் அதிக நெரிசல் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் போன்ற சவால்கள் இருந்தன. இதைத் தீர்க்க, 2025 ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாடு அரசு, சென்னையில் 25 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்காக 50 சிறப்பு பேருந்துகளை அறிமுகப்படுத்தியது. 
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பேருந்து திட்டம், கல்வியை அணுகக்கூடியதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றும் ஒரு மைல்கல். இது, அரசின் சமூக நீதி மற்றும் கல்வி முன்னேற்றக் கொள்கைகளின் சின்னமாகத் திகழ்கிறது.
இதையும் படிங்க: பள்ளி குழந்தைகளை கால் அமுக்கச் சொன்ன ஆசிரியர்… வைரல் வீடியோவால் சிக்கிய சம்பவம்!
சட்டமன்ற உறுப்பினராக 1989இல் தனது முதல் உரையே மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்பதுதான் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். தனது உரையை ஏற்று முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி செயல்படுத்திய திட்டம் நாட்டுக்கு வழிகாட்டியதாக கூறினார். அதன் தொடர்ச்சியாக மாணவர்கள் மட்டும் பயணிக்கும் சிறப்பு பேருந்துகளை நமது ஆட்சியில் இயக்கி வருவதாக தெரிவித்தார். மாணவர்களுக்கான பேருந்துகள் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அமைச்சர் சிவசங்கர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
இதையும் படிங்க: இனி ஆன்லைனில் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்! தமிழக அரசின் புதிய திட்டம்...