தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் காலமானார். தமிழ்நாடு அரசின் இசுலாமிய தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தமிழ்நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு சேவை செய்வதற்காக தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்த இஸ்லாமிய அறிஞர் அவர்.

உண்மையான இஸ்லாமிய அறிஞருக்கான சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்து, பரந்த அறிவு, நிபுணத்துவம் மற்றும் சமூக சேவை மீதான ஆர்வம் ஆகியவை ஈடு இணையற்றவை என்று போற்றப்பட்டவர்.
இதையும் படிங்க: எனக்காக நிதி வழங்கிய பிரதமர் மோடி.. ஸ்டாலினிடம் மோடி சொன்ன சீக்ரெட்.. விளக்கிய ஸ்டாலின்!

அவரது மறைவு இஸ்லாமியர்கள் மற்றும் பல்வேறு தரப்பு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மறைந்த தலைமை காஜியின் உடலுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து துயரத்தில் பங்கெடுத்தார்.
இதையும் படிங்க: #BREAKING: ED இல்ல மோடியே வந்தாலும் பயப்பட மாட்டோம்.. துணை முதல்வர் உதயநிதி தடாலடி!!