சென்னை கொளத்தூர் தொகுதியில் உள்ள பூம்புகார் நகரில் கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியை முதலமைச்ச ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், கல்விதான் கடவுள் என்றும் அதுதான் உங்களுக்கு நிறைய கொடுக்கும்., அதனால் படியுங்கள் எனவும் தெரிவித்தார். கலைக் கல்லூரி சிறப்பாக கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்ட இன்றைய நாள் பெருமை கொள்ளத்தக்க நாள் என்று தெரிவித்துள்ளார்.
கல்லூரியை கட்ட சொன்னால் ஒரு பல்கலைக்கழகத்தையே அமைச்சர் சேகர்பாபு கட்டி இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். உங்களுக்கு இது பிப்ரவரி மாதம் திமுகவுக்கு இது மாநாடு மாதம் என்று கூறினார். நினைத்ததை விட பல மடங்கு சிறப்பாக கல்லூரியை அமைத்த சேகர் பாபு அமைத்து கொடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

கொளத்தூருக்கு வந்து உங்களுக்காக உழைப்பது தான் தனது உற்சாகம் என்றும் ஓய்வில்லாமல் உழைக்கும் போது உங்களை வந்து பார்த்தால் பூஸ்ட் ஆகிடுவேன் என்றும் தெரிவித்தார். கொளத்தூர் தொகுதி அனைத்து நலத்திட்டங்களுக்குமான மாடலாக திகழ்கிறது என்றும் தெரிவித்துள்ளார். கொளத்தூர் தொகுதிக்கு செய்யப்பட்ட நலத்திட்டங்கள் அனைத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் பட்டியலிட்டு பேசினார்.
இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்... பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டி? பளீச் பதிலளித்த சேகர்பாபு..!!
கொளத்தூர் தொகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ள அனைத்தையும் பார்த்து பல்வேறு தரப்பினரும் வியந்து வருவதாக கூறினார். இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருவதாக பெருமையுடன் கூறினார். பெண்கள் முன்னேற்றத்திற்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண், இலவச பயணம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஆமாம்சாமியை வச்சுக்கிட்டு டப்பா எஞ்சின்..!! E.D. யை ஒரு கை பாத்துடுவோம்...!! முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்..!!