போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை சிறையில் அடைக்க வில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. தமிழக சட்டமன்றத்தின் 2026-ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்குச் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள பேரவை மண்டபத்தில் தொடங்கியது.
இந்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் ரவி தனது உரையை நிகழ்த்துவார் என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அது ஏமாற்றத்தில் தான் முடிந்தது. இரண்டாம் நாள் கூட்டத்தில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மூன்றாம் நாள் கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்ற நிலையில் கேள்வி நேரம் நடந்தது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.

விவசாயிகள் பிரச்சனை குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது. அனுமதி மறைக்கப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமி கடும் வாக்குவாதம் செய்த நிலையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பிறகு, அதிமுகவினர் வெளிநடப்பு செய்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் உரை நிகழ்த்தினார். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை சிறையில் அடைக்க வில்லை என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுப்பு.. சர்வாதிகார அரசு..! இபிஎஸ் கடும் கண்டனம்..!
அதிமுக ஆட்சியைப் போல் இரவோடு இரவாக அரசு ஊழியர்களை நாங்கள் கைது செய்யவில்லை என்றும் குறிப்பிட்டார். நாங்கள் அரசு ஊழியர்கள் பிரச்சனையில் 95 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்களின் கோரிக்கை கட்டாயம் நிறைவேற்றப்படும் என்றும் உறுதிப்படுத்த தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சட்டசபை 3 ஆம் நாள் கூட்டம்... இபிஎஸ் வாக்குவாதம்..! அதிமுகவினர் வெளிநடப்பு..!