தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளினரும் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று திருவாரூரில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இன்று திருச்சியில் திமுக வேட்பாளர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கே.என். நேரு மற்றும் இனிகோ இருதயராஜ் ஆகியோரே ஆதரித்த முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
பரப்புரையின் போது பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் சாதி கலவரங்கள் இல்லை என்றும் பாஜக ஆளு மாநிலங்களைப் போல் மத கலவரங்கள் இல்லை எனவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் கலவரங்களை உருவாக்கும் என்ற பாஜகவின் முயற்சிகளை முறியடித்திருப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் அமைதியான சூழலும் மனித வளமும் இருப்பதால்தான் எண்ணற்ற முதலீடுகள் வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

தேர்தல் வாக்குறுதியாக தான் அறிவித்துள்ள 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் திட்டம் பற்றிய பேச்சாக இருக்கிறது என்று கூறியுள்ளார். 8000 ரூபாய் கூப்பனை பயன்படுத்தி உங்கள் பகுதி கடைகளில் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்றார். திமுக கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் தரமாக இருக்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். கடந்த தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் அதிமுக பாஜக கூட்டணி படுதோல்வி அடையும் என்று கூறியுள்ளார். சம்பந்திக்கு ஒப்பந்தங்கள் பெற்றுக் கொடுப்பதற்காகவே ஆட்சியை நடத்தியவர் எடப்பாடி என்றார்.
இதையும் படிங்க: எடப்பாடியின் கையில் 70 பேரின் ரத்தக்கறை… முழு சங்கி…! வெளுத்து வாங்கிய முதல்வர் ஸ்டாலின்..!!
என்ன வேண்டுமானாலும் பேசலாம் என பேசிக்கொண்டு இருப்பதாகவும் பாஜகவின் பாதம் தாங்கி எடப்பாடி பழனிச்சாமி என்றும் குறிப்பிட்டார். கூட்டணிக்கு தலைமை அதிமுக எனில் டெல்லியில் ஏன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதிமுக கூட்டணிக்கு தலைமை எனில் பாஜக சின்னத்தில் கட்சிகள் போட்டியிடுவது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளார். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் வேட்பாளர் என பிரதமர் ஒரு முறையாவது கூறினாரா என்று கேட்டார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி, அமித் ஷாவுடன் விஜய் ரகசிய கூட்டு... அமைச்சர் ராஜேந்திரன் கடும் தாக்கு...!