திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரி பவள விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, மாணவர்களை சந்திக்கும் போது மனதில் உற்சாகம் விடுகிறது என்றும் மாணவர்கள் சமூக அக்கறை கொண்டவர்களாக வளர வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். ஜமால் முகமது கல்லூரிக்கு ஏற்கனவே 2006 இல் நிறுவன நாள் விழாவிற்கும் வந்திருக்கிறேன் என்று கூறிய அவர், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் படிப்புக்காக தொடங்கப்பட்ட ஜமால் முகமது கல்லூரி 75 ஆண்டாக கனவை நினைவாக்குகிறது என்று பெருமிதம் தெரிவித்தார்.

முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து பல இடங்களுக்கு சென்று அரசின் பல கூட்டங்களில் பங்கேற்று ஆய்வு செய்து வருவதாகவும் கல்விதான் ஒருவரின் நிலையான சொத்து என்றும் தெரிவித்தார். இளம் மாணவர்களை சந்திக்கும் போது எனக்கு உற்சாகம் பிறந்து விடுகிறது என்று கூறிய முதலமைச்ச ஸ்டாலின், கல்லூரி நட்பு எப்போதும் தொடர வேண்டும்., அது சமூகத்திலும் எதிரொளிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "சமூக நீதி விடுதிகள்"..! அடுத்தடுத்து மாஸ் அறிவிப்புகளை வெளியிடும் முதல்வர் ஸ்டாலின்..!

கோட்சே கூட்டத்தின் பின்னால் மாணவர்கள் சென்று விடக்கூடாது இன்று அறிவுறுத்திய முதலமைச்சர், காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என நமக்கு பல்வேறு வழிகள் இருப்பதாக கூறினார். உயர்ந்த சிந்தனையாளர்களின் கருத்துக்களை செயல் வடிவமாக மாற்றுவது மாணவர்களால் தான் முடியும் என்றும் நான் அரசியல் பேசவில்லை., மாணவர்களுக்கு அரசியல் புரிய வேண்டும் என்று தான் பேசுகிறேன் எனவும் கூறினார்.

ஓரணியில் தமிழ்நாடு நின்றால் யாராலும் எதையும் தடுத்த நிறுத்த முடியாது என்ற திட்டவட்டமாக தெரிவித்த முதலமைச்சர், 2011, 2016 இல் யுஜிசி ஆற்றல் வள தனித் தொகுதி பெற்ற கல்லூரியாக ஜமால் கல்லூரி தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் ஐஏஎஸ், ஐபிஎஸ், அமைச்சர்கள் நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் ஜமால் முகமது கல்லூரியில் படித்தவர்கள் தான் என்றும் தெரிவித்தார். தகைசால் தமிழராக காதர் மொய்த்தின் உயர்ந்து நிற்பதாக பெருமிதம் தெரிவித்த முதல்வர், தமிழ் சமூகத்தை அறிவு சமூகமாக உருவாக்கி புதிய வாய்ப்புகளை உருவாக்கி தருவதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்... வெத்து விளம்பரம் இப்ப தேவையா? ஸ்டாலினை வசைப்பாடிய இபிஎஸ்