மதுரையின் பி.பீ.குளம் பகுதியை சேர்ந்தவர் கபில்முகமது. 2019ஆம் ஆண்டு தனது கல்லூரி நண்பர் நூருல் சிகாபுதீன் மூலமாக காரைக்குடி பிரகாஷ், கண்ணன், ஈரோடு பிரவீன்குமார், விஸ்வநாதன் ஆகியோருடன் அவர் அறிமுகமானார். இவர்கள் சேர்ந்து “தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்” என்று கூறி கபில்முகமதுவிடம் முதலீடு செய்யுமாறு கேட்டுள்ளனர்.
அவர்களின் வாக்குறுதியை நம்பிய கபில்முகமது, 2019 முதல் 2022 வரை பல தவணைகளாக மொத்தம் ரூ.1 கோடி 80 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார். ஆரம்பத்தில் சிறிய அளவில் லாபம் கொடுத்து நம்பிக்கையைப் பெற்ற இவர்கள், பின்னர் “நஷ்டம் ஏற்பட்டது” என்ற பெயரில் எந்தத் தொகையையும் திருப்பி வழங்க மறுத்துள்ளனர்.
பணம் கேட்டபோது, “மறுபடியும் கேட்டால் உயிருடன் இருக்க மாட்டாய்” என கொலை மிரட்டல் விடுத்ததாக கபில்முகமது புகார் அளித்துள்ளார். இதனால் மதுரை மத்திய குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, முக்கிய குற்றவாளியான பிரகாஷை கைது செய்தனர்.
இதையும் படிங்க: பெண்கள் வேலை செய்ய பாதுகாப்பான டாப் 10 இந்திய மாநிலங்கள்.. லிஸ்ட்ல நம்ம தமிழ்நாடு இருக்கா..??
மீதமுள்ள சந்தேக நபர்களான கண்ணன், பிரவீன்குமார், விஸ்வநாதன், நூருல் சிகாபுதீன் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அரசியல் பதவி வகிக்கும் ஒருவர் இப்படிப் பெரும் நிதி மோசடியில் சிக்கியிருப்பது, காரைக்குடி மற்றும் மதுரை பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் மேலும் பலர் இந்த மோசடியில் சிக்கியிருக்கக்கூடும் எனவும், புகார் அளிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கிறார்கள்.
இதையும் படிங்க: பச்சை பொய் பேசிய பாக்.,! மூக்கறுத்த அமெரிக்கா! கைமாறும் பவர்புல் மிசைல்? India vs US!!