வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

“விஜய் மாமா”-னு சொன்னீங்களே..? அப்ரண்டிஸ்களாக மாறும் அரசு பள்ளி மாணவர்கள்… நயினார் தாக்கு..!!

ஊதியம் இல்லாத ஊழியர்களாக அரசு பள்ளி மாணவர்கள் மாறுகிறார்கள் என்று நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.

அரசுப்பள்ளி மாணவர்களை, ஊதியமில்லா ஊழியர்களாக நடத்தும் அவலம் எப்போது தான் மாறும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வேதனை தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, தவெக அமைச்சர் தமிழன் பார்த்திபன், “குழந்தைகள் பள்ளிகளை சுத்தம் செய்வதில் எந்தவொரு தவறும் இல்லை” என்ற ரீதியில் பேசியது கடும் விமர்சனத்திற்குள்ளான நிலையில், தற்போது திருப்பத்தூர் மாவட்டம் கேதாண்டப்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏற்பட்ட கழிவுநீர் அடைப்பை சரி செய்யும் பணியில், அங்கு படிக்கும் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.

அதிலும் தாங்கள் சுரண்டப்படுகிறோம் என்பது கூட தெரியாமல், எங்கள் தலைமை ஆசிரியர் தான் செய்ய சொன்னார், பள்ளியில் எப்போதுமே இந்த வேலையை நாங்கள் தான் செய்வோம் என அப்பாவித்தனமாகக் கூறும் அம்மாணவர்களைக் காண்கையில் ஒரு தந்தையாக நெஞ்சம் கனத்துப் போகிறது என்று கூறினார். படிக்கும் பிள்ளைகளை, இப்படி துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்துவது, மனிதாபிமானமற்றது மட்டுமன்றி குழந்தைகளின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தூத்துக்குடி காவல் மரண விவகாரம்… அருணாச்சலம் பெற்றோருக்கு ஆறுதல்..! ஓடோடிச் சென்ற நயினார்..!!

எனவே, “உங்கள் விஜய் மாமா” என்று தன்னைத் தானே விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் முதல்வர் விஜய், அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் தேவையான துப்புரவுப் பணியாளர்களை நியமித்து, அரசுப் பள்ளி மாணவர்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று வாக்கு உள்ளார். மேலும், தனியார் பள்ளிகளை மட்டும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அரசுப்பள்ளிகளில் இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். 

இதையும் படிங்க: "தவெககாரன்"…! குற்றவாளிகள் கூடாரமா TVK..? CM விஜய் மீது நயினார் தாக்கு..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी