தமிழ்நாடு அரசு, மக்களின் நலனை முன்னிறுத்தி பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்த வரிசையில், மக்களின் உடல்நலனை பாதுகாக்கவும், இலவச மருத்துவ சேவைகளை அனைவருக்கும் எளிதாக கிடைக்கச் செய்யவும் வடிவமைக்கப்பட்ட ஒரு முக்கிய திட்டமாக “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் உருவாகியுள்ளது. இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் ஆகஸ்ட் இரண்டாம் தேதி தொடங்கி வைத்தார்.
முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் புதிய பயனாளர்கள் இணைவதற்கு இந்த திட்டம் வழிவகை செய்யப்படுவதால், மருத்துவ செலவுகளுக்கு நிதி உதவி கிடைக்கிறது. மேலும், கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்கள் அனைவருக்கும் மருத்துவ சேவைகள் அருகாமையில் கிடைப்பது, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது.

இதனிடையே, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் முதலமைச்சரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது எதிர்த்து வழக்கறிஞர் எம். சத்யகுமார் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். ஏற்கனவே, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் அதிமுகவை சேர்ந்த சி.வி ஷண்முகத்துக்கு 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில், தற்போது நலம் பாக்கம் ஸ்டாலின் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இதையும் படிங்க: நலம் காக்கும் ஸ்டாலின் வெற்று விளம்பரமா? முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க! சுகாதாரத்துறை ரிப்போர்ட்..!
தமிழக அரசின் திட்டத்தில் முதலமைச்சரின் பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் திட்டத்திற்கு முதலமைச்சர் பெயரை பயன்படுத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை எதிர்த்த வழக்கை ஒரு லட்ச ரூபாய் அபராதத்துடன் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வழக்கை வாபஸ் பெறவும் அனுமதி மறுத்து தலைமை நீதிபதி அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: இப்படி ARREST பண்ண குண்டர்களா? நக்சலைட்டுகளா? இன்னும் எட்டு மாசம் தான்…கதை க்ளோஸ்! EPS ஆவேசம்