நல்லகண்ணு, தமிழ்நாட்டின் சமூக மற்றும் அரசியல் இயக்கங்களில் மிக முக்கியமான பங்களிப்பு ஆற்றியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராகவும், தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் உரிமைகளுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவராகவும் அறியப்படுகிறார். அவரது சமூகப் பங்களிப்பு, தமிழ்நாட்டின் உழைக்கும் மக்களின் நலனுக்காகவும், சமூக நீதிக்காகவும் மேற்கொள்ளப்பட்ட அயராத முயற்சிகளால் பரவலாகப் பாராட்டப்பட்டுள்ளது.
நல்லகண்ணு தனது வாழ்நாள் முழுவதும் உழைப்பாளி மக்களின் உரிமைகளுக்காகப் போராடினார். குறிப்பாக, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களை மேம்படுத்துவதற்காக பல இயக்கங்களை முன்னெடுத்தார். அவரது தலைமையில், தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர் சங்கங்கள் பலம் பெற்றன, மேலும் அவர்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றினார். சமீப நாட்களாக நல்லக்கண்ணு உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், நல்லக்கண்ணு உடன் இயற்கை போராடிக் கொண்டிருக்கிறது என சிபிஐ மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மிகத் தீவிர சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணுவின் உடல் நிலையை விசாரித்த பின்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
இதையும் படிங்க: உயிருக்கு போராடும் முக்கிய தலைவர்... வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை...மருத்துவமனை விரைந்தார் முதல்வர் ஸ்டாலின்...!
கடந்த 20 நாட்களாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நல்லகண்ணு சிகிச்சை பெற்று வருவதாகவும் நல்லக்கண்ணுவின் உடல் தொடர்ந்து பின்னடைந்து கொண்டு வருகிறது என கூறிய அவர், நீண்ட நாட்களாக இயற்கையுடன் நல்லக்கண்ணு போராடிக் கொண்டு வருவதாகவும் உணர்வு மங்கிய சூழ்நிலைகளிலும் நாட்டில் உள்ள எளிய மக்களை சிந்தித்தபடியே உள்ளார் என்றார். நல்லகண்ணுவிற்கு ஒவ்வொரு நொடியும் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ அறிக்கைக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காத்திருப்பதாகவும் இயற்கை அவருடன் போராடிக் கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையின் முக்கிய தொகுதிக்கு குறி... அறிவாலய அஸ்திவாரத்தை அசைக்க பார்க்கும் கூட்டணி கட்சி... திமுகவுக்கு அடுத்த ஷாக்...!