×
 

ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்பு! 23 பேர் உபா சட்டத்தில் பயங்கரவாதிகளாக அறிவிப்பு!

ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா அமைப்புகளுடன் தொடர்புடைய, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட 23 நபர்களை உபா சட்டத்தின் கீழ் 'பயங்கரவாதிகள்' என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 23 நபர்களை மத்திய அரசு பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அரசிதழ் அறிவிப்பு வெளியிட்டது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், இந்த 23 பேரும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம் (UAPA) பிரிவுகளின் கீழ் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பயங்கரவாத ஆட்சேர்ப்பு, ஊடுருவல், பயிற்சி அளித்தல், ட்ரோன் மூலம் ஆயுதங்கள் கடத்துதல் மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதியில் தாக்குதல்களை திட்டமிடுதல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்த 23 பேரில் மூவர் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் முஹம்மது சயீத்தின் நெருங்கிய கூட்டாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மூவர் 2016-ம் ஆண்டு நக்ரோட்டா ராணுவ முகாம் மீதான பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள். இருவர் 2018-ம் ஆண்டு சுன்ஜ்வான் ராணுவ முகாம் மீதான தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஆபரேசன் சிந்தூர்! வீர மரணத்தை தழுவிய 6 வீரர்கள்!! முதல்முறையாக பொதுவெளியில் பெயர் வெளியீடு!

இந்த அறிவிப்பு தேசிய பாதுகாப்பு அமைப்புகளுக்கு பெரும் வலு சேர்க்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் நம்புகின்றன. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயல்பாடுகளை கட்டுப்படுத்தவும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் இந்த அறிவிப்பு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பாதுகாப்புப் படைகள் ஏற்கெனவே இந்த அமைப்புகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தப் புதிய அறிவிப்பு மேலும் வலு சேர்க்கும். பயங்கரவாதிகளின் சொத்துக்கள் முடக்கப்படுதல், பயணத் தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் இனி இவர்களுக்கு பொருந்தும்.

இந்த நடவடிக்கை இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் முக்கிய அரசு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர் குறித்து வாய்விட்ட பாகிஸ்தான்! வச்சு செய்த இந்தியா! ஐநாவில் காரசார விவாதம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share