×
 

ரூ.4700 கோடி மணல் கொள்ளை... உடனடியா நடவடிக்கை எடுக்கணும்... லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக கடிதம்...!

தமிழகத்தில் 4700 கோடி ரூபாய் அளவுக்கு மணல் கொள்ளை நடந்திருப்பதாக அதிமுக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மணல் கொள்ளை தொடர்பான ஒரு பெரும் சர்ச்சை கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அமலாக்கத்துறை (ED) நடத்திய விசாரணையில், தமிழ்நாட்டில் 28 மணல் குவாரிகளில் அனுமதியின்றி 987 ஹெக்டேர் பரப்பளவில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 4,730 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அரசுக்கு கிடைத்த வருவாய் வெறும் 36.45 கோடி ரூபாய் மட்டுமே என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த பெரிய இடைவெளி, சட்டவிரோத மணல் அள்ளல் மற்றும் பணமோசடி நடந்திருப்பதற்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது.

இந்த விவகாரம் அமலாக்கத்துறையின் கவனத்துக்கு வந்ததும், 2023-ஆம் ஆண்டு செப்டம்பரில் பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. அதில் போலி பில்கள், போலி க்யூஆர் கோடுகள் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், மணல் அள்ளும் இயந்திரங்கள் விற்பனை செய்த நிறுவனங்களிடம் விசாரணை நடத்தியதில், ஒரு சில தனியார் நிறுவனங்களே பெரும்பாலான இயந்திரங்களை வாங்கியது தெரியவந்தது.

இதன் மூலம் மூன்று நபர்கள் மட்டுமே தமிழக மணல் கொள்ளைக்கு பின்னால் இருப்பதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இதுவரை 209 இயந்திரங்கள் உள்ளிட்ட சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.அதிமுக இந்த விவகாரத்தை திமுக அரசுக்கு எதிராக ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் நான்காயிரத்து எழுநூறு கோடி ரூபாய் அளவுக்கு மணல் கொள்ளை நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக கடிதம் எழுதி உள்ளது.

இதையும் படிங்க: விவசாயி வேஷம் போட்டு அரசியல் செய்வாங்க... விவசாய எதிர்ப்பு சட்டத்தையும் ஆதரிப்பாங்க... சூசகமாக பேசிய முதல்வர்...!

அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது. மணல் யூனிட் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்து விரோதமாக கொள்ளை நடந்துள்ளதாக அதிமுக புகார் தெரிவித்துள்ளது. மேலும் தமிழக டிஜிபி மற்றும் அமலாக்கத்துறைக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நீர்வளத் துறை கணக்கில் 36.45 கோடி ரூபாய் மட்டுமே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: விவசாய திட்டங்களில் தமிழ்நாடு முன்னோடி... திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share