வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

உங்க கனவை சொல்லுங்க… தமிழக அரசின் புதிய திட்டம்..! அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்…!

உங்க கனவை சொல்லுங்க புதிய திட்டத்தை வரும் ஒன்பதாம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

உங்கள் கனவை சொல்லுங்கள் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உள்ள கனவை தெரிந்து கொள்ளும் வகையில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் திட்டங்களில் எது உங்களுக்கு பயனுள்ள திட்டம் என்றும் உங்களின் கனவு என்ன என்று கேள்விகளை கேட்டும் பதில் பெற முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். செயலி மூலம் அவர்களின் பதிலை பெற்று பதிவு செய்து கனவு அட்டை என்ற புதிய அட்டை வழங்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

ஒரு கோடியே 91 லட்சம் குடும்பங்கள் பயன் பெறும் வகையில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார். ஆட்சியர்கள் தலைமையில் கருத்தரங்கங்கள் நடத்தி பொதுமக்களின் கனவுகளை கேட்டு அறிய உள்ளதாகவும் கூறினார். இளைய சமுதாயம் மற்றும் அயலக தமிழர்களிடமும் கனவுகள் குறித்து கேட்டு அறிய முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அவங்க என் குடும்பம்… இடைநிலை ஆசிரியர்களை கைவிடமாட்டோம் – அன்பில் மகேஷ் உறுதி…!

உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டத்திற்காக ஐம்பதாயிரம் தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் அரசு என்ன செய்தது., என்ன செய்ய வேண்டும்., 2030க்குள் உங்கள் ஊர் சார்ந்த தேவை என்ன நிறைவேற்ற வேண்டும் என்ற கேள்விகள் இருக்கும் என்று கூறினார். வரும் ஒன்பதாம் தேதி உங்க கனவை சொல்லுங்க திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாகவும் பொன்னேரியில் திட்டம் தொடங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். அனைவரின் கருத்துக்களை கேட்டு அறிந்து திட்டத்தை செயல்படுத்துவதற்காக நிதி திரட்டப்படும் என்றும் கூறினார். 

இதையும் படிங்க: இதை அன்றைக்கே செய்திருக்கலாமே..! யார் மத கலவரத்தை தூண்டுவது..? நயினார் விளாசல்..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी