வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

மாம்பழ சின்னம் யாருக்கு? ரத்து பண்ணுங்க…! ராமதாஸ் தொடர்ந்த வழக்கு பிப். 2 ல் விசாரணை..!

மாம்பழம் சின்னம் தொடர்பாக ராமதாஸ் தொடர்ந்த பிப்ரவரி 2ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

பாமகவின் தலைமைப் பதவி குறித்த பிரச்சினை 2025-ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்தே தீவிரமடைந்தது. அன்புமணி ராமதாஸின் தலைவர் பதவிக்காலம் மே 28, 2025 அன்று முடிவடைந்ததாக ராமதாஸ் தரப்பு கூறி வருகிறது. அதன்பிறகு ராமதாஸ் தானே கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றதாக அறிவித்து, தேர்தல் ஆணையத்துக்கும் தகவல் அளித்திருந்தார்.

ஆனால், தேர்தல் ஆணையம் 2025 ஜூலை 30-ஆம் தேதி ஒரு கடிதத்தை அனுப்பியது. அந்தக் கடிதத்தில், தமிழக சட்டமன்றத் தேர்தல் உள்ளிட்ட வரவிருக்கும் தேர்தல்களுக்காக பாமகவுக்கு 'மாம்பழம்' சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தக் கடிதம் அன்புமணி ராமதாஸின் சென்னை முகவரிக்கு அனுப்பப்பட்டது. இதைத்தான் ராமதாஸ் தரப்பு கடுமையாக எதிர்த்துள்ளது. அன்பு மணி தரப்பு மீீது கடுமையான குற்றச்சாட்டும் முன் வைத்தனர்.

தாங்கள் கட்சியின் உண்மையான தலைவரும், நிறுவனரும் ராமதாஸ் தான் என்றும், எனவே அந்தக் கடிதம் தங்கள் முகவரிக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும் என்றும் வாதிட்டுள்ளனர். இந்தக் கடிதம் தவறான முகவரிக்கு சென்றதால், அது அன்புமணி தரப்புக்கு சாதகமாக அமைந்துவிட்டதாகவும், இது நியாயமற்றது என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: ரூ.1020 கோடி டெண்டர் முறைகேடு… அமைச்சர் நேருவுக்கு எதிராக அதிமுக வழக்கு… விசாரணைக்கு ஏற்ற ஹைகோர்ட்..!

இதனால், அந்த தேர்தல் ஆணைய கடிதத்தை ரத்து செய்து, புதிதாக தங்கள் முகவரிக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும் என்று ராமதாஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. ராமதாஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை பிப்ரவரி இரண்டாம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாம்பழம் சின்னம் யாருக்கு என்பது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்தின் கடிதம் மீதான விவாதமும் நடைபெறும் என கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: பாதுகாப்பு முக்கியமில்லையா? புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோத ரிசார்ட்டுகள்… ஆட்சியருக்கு எச்சரிக்கை…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी