அடுத்த மாதம் முதல் ஆட்டம் ஆரம்பம்... தங்கம் விலை சரசரவென குறையப்போகுதாம்... முதலமைச்சர் கொடுத்த முக்கிய அப்டேட்..!
அமராவதி மட்டுமல்ல விசாகப்பட்டினத்தையும் ஒரு உலகளாவிய நகரமாக உருவாக்குகிறோம் என முதல்வர் சந்திரபாபு பெருமிதம்
கர்னூலில் அடுத்த மாதம் முதல் நாட்டின் தேவையில் 50 முதல் 60 சதவீதம் தங்கம் உற்பத்தி செய்யப்படும் என அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு தெரிவித்துள்ளார்.
அமராபதி தலைநகர் பகுதியில் கீம்ஸ் மருத்துவமனை மற்றும் மருத்துவப் பல்கலைக்கழகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்று நடத்தினார். இந்நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் அவர் பேசுகையில் நாங்கள் ராயலசீமாவை ரத்தினங்களின் பூமியாக மாற்றி வருகிறோம். பல தொழிற்சாலைகள் அந்தப் பகுதிக்கு வருகின்றன. அனந்தபுரம் ஒரு விண்வெளி மையமாக மாறப்போகிறது. ராயலசீமா ஒரு தொழில்நுட்ப மையமாக மாறி வருகிறது. திருப்பதியில் ஒரு விண்வெளி நகரமும், கர்னூலில் ஒரு ட்ரோன் நகரமும் அமைக்கப்படவுள்ளன. ஸ்ரீ சிட்டி ஒரு தொழில்துறை மையமாக மாறியுள்ளது. பாஸ்கர் ராவ் ஒரு தொலைநோக்குப் பார்வையை வழங்கியுள்ளார்.
2027 ஆண்டு மே 13 அன்று இந்த மருத்துவமனையைத் திறப்போம். கூகுள் நிறுவனம் ஆகஸ்ட் 15, 2028-க்கு முன்னர் விசாகப்பட்டினத்தில் தனது செயல்பாடுகளைத் தொடங்கும். டிசம்பர் 2028-க்குள் முதல் கட்டத்தை முடிக்க ஆர்கெலர் மிட்டலுக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். தேவையான அனைத்து அனுமதிகளையும் அரசு சார்பில் விரைவாக வழங்குவோம். ஒரு லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்போம். மருத்துவர்களும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) கற்று வருகின்றனர். ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதே எங்கள் அரசின் நோக்கம். உலகில் உள்ள ஒவ்வொரு மூன்று மருத்துவர்களில் ஒருவர் இங்கிருந்து வர வேண்டும். டிசம்பர் மாதத்திற்குள் அமராவதி இந்தியாவில் குவாண்டம் கம்ப்யூட்டர் முகவரியாக இருக்கும். அது நிச்சயம் இருக்கும். வளர்ச்சியைப் பொறுத்தவரை அமராவதியில் மட்டும் கவனம் செலுத்தப்படவில்லை.
இதையும் படிங்க: மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநிலங்களின் உரிமை: நீட் தேர்வை ரத்து செய்ய முதல்வர் விஜய் அதிரடி வலியுறுத்தல்!
விசாகப்பட்டினத்தையும் ஒரு உலகளாவிய நகரமாக உருவாக்குகிறோம் முதலீட்டாளர்களை மாநிலத்திற்கு அழைத்து வந்து ஒப்பந்தம் செய்வதோடு மட்டுமல்லாமல் அதன் செயல்பாடு தொடங்கவும் இலக்கு நிர்ணயத்த்து செயல்படுகிறோம் . வேலைவாய்பிற்கு வெளிநாடுகளைச் சார்ந்து இருக்காமல் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். நமது மாநிலத்திலேயே பசுமை ஆற்றலை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு பண்ணை மற்றும் வீட்டிலும் சூரிய மேற்கூரை மின் உற்பத்தி மையங்களை அமைக்கப்படும். மேற்கு ஆசியப் போரினால் பெட்ரோல், எரிவாயு மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள எரிப்பொருள் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகமாக உயர்ந்துள்ள நிலையில் எரிப்பொருள் பயன்பாட்டை குறைக்க எதிர்காலத்தில், வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை வரும். அதை அரசாங்கத்திலும் கொண்டு வருவோம். தற்போது யார் சென்றாலும் அவர்கள் பின்னாள் 10 கார்கள் கொண்ட வாகன அணிவகுப்பில் வருவது ஒரு நாகரிகமாகிவிட்டது. பாதுகாப்பு என்பது அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் தேவையில்லாமல் வாகன அணிவகுப்பு இருக்க கூடாது.
தங்கம் இறக்குமதி செய்யப்படக்கூடிய நிலையில் அந்நியச் செலாவணி இருப்பு குறைந்துள்ளது. இதனால் பிரதமர் மோடி தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டுக்கு நிறுத்தும்படி கூறியுள்ளார். இதனை நானும் ஏற்கிறேன். நம் மாநிலத்திலேயே கர்னூலில் தங்க சுரங்கம் தயாராகி வருகிறது. இதில் நாட்டின் தேவையில் 50 முதல் 60 சதவீதம் தங்கம் கிடைக்க உள்ளது . இதன் உற்பத்தி அடுத்த மாதம் முதலே தொடங்கப்பட உள்ளது . மேலும் விடுமுறை வரும்போது, மக்கள் வெளிநாடு செல்கிறார்கள். நமது நாட்டில் நல்ல சுற்றுலாத் தலங்கள் உள்ளன. ஆந்திராவில் அரக்கு, பாபிகொண்டலு, கண்டிகோட்டா போன்ற இடங்கள் நமது மாநிலத்தில் உள்ளன. கோவாவையும் தாண்டி சூர்யலங்கா ஒரு சுற்றுலா மையமாக மாறும் என்றார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பெம்மசானி சந்திரசேகர் மற்றும் பல மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: “அறியாமல் செய்த தவறு; அரசியலாக்க வேண்டாம்”: அமைச்சர் கீர்த்தனா மன்னிப்பு!