இந்தியா வந்திறங்கிய அமெரிக்கா அரக்கன்!! எதிரிகளை துவம்சம் செய்யும் அப்பாச்சி! வந்தாச்சி!
அமெரிக்காவின் அதி நவீன போர் ரக அப்பாச்சி ஹெலிகாப்டர் இன்று இந்தியா வந்து சேர்ந்தது. உபி., மாநிலம் ஹிண்டன் விமானபடை தளத்தில் வந்து இறங்கியது. இன்னும் 2 நாட்களில் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும்.
உலகின் அதிநவீன போர் ஹெலிகாப்டர்களில் சக்தி வாய்ந்தது AH-64E என்னும் அப்பாச்சி ராணுவ ஹெலிகாப்டர். இதை அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரிக்கிறது. நம் ராணுவத்துக்காக இந்த போர் விமானங்களை வாங்க 2020ம் ஆண்டில் அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் போட்டது. ஒப்பந்தப்படி சுமார் 5200 கோடி ரூபாயில் 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு அமெரிக்கா தர வேண்டும்.
2024 துவக்கத்தில் இவை இந்தியாவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக ராணுவத்தில் சிறப்பு படையை இந்தியா உருவாக்கியது. ஆனால் எதிர்பார்த்த தேதியில் போர் ஹெலிகாப்டர்கள் வரவில்லை.
பின்னர் கடந்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தொழில்நுட்ப காரணங்களால் டிசம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. இப்போது ஒரு வழியாக இன்னும் 2 நாட்களில் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு வர இருப்பது உறுதியாகி உள்ளது.
இதையும் படிங்க: இந்தியா - பாக்., போரை நிறுத்தியவர் டிரம்ப்.. கொளுத்திப்போட்ட கரோலின்.. மீண்டும் வெடிக்கும் சர்ச்சை..!
முதல் கட்டமாக 3 ஹெலிகாப்டர்கள் செவ்வாய்க்கிழமை வருகின்றன. அடுத்த 3 ஹெலிகாப்டர்கள் செப்டம்பர் மாதம் வர இருக்கின்றன. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து வெடித்த இந்தியா-பாகிஸ்தான் போருக்கு பிறகு அப்பாச்சி ஹெலிகாப்டர் இந்தியா வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, இந்த ரக போர் ஹெலிகாப்டர் நம்மிடம் 22 இருக்கின்றன. 2015ம் ஆண்டு 14,000 கோடி ரூபாயில் போட்ட ஒப்பந்தப்படி இவற்றை வாங்கினோம்.
22 ஹெலிகாப்டர்களும் நம் விமானப்படையில் சேர்க்கப்பட்டன. இப்போது வாங்கும் 6 ஹெலிகாப்டர்களும் ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளன. அப்பாச்சி போர் ஹெலிகாப்டர் மிகவும் சக்தி வாய்ந்தது.
அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் விமானப்படையில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. அப்பாச்சி இரட்டை இன்ஜின் போர் ஹெலிகாப்டர் ஆகும்.
மணிக்கு 289 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்க கூடியது. ஒரே நிமிடத்தில் 2,800 அடி உயரம் மேல்நோக்கி எகிற கூடியது. எதிரி நாடுகளை பந்தாடும் வகையில் குண்டுகள், ஏவுகணைகளை துல்லியமாக வீசக்கூடியது.
இரவு நேரத்திலும் அப்பாச்சி ஹெலிகாப்டரால் குண்டு வீச முடியும். எல்லா கால நிலைகளிலும் சண்டை செய்யும் சக்தி இதற்கு உண்டு. எனவே தான் இந்திய பாதுகாப்பு படையில் மேலும் 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் சேர இருப்பது நம் எதிரிகளை அச்சத்தில் மூழ்கடித்துள்ளது. இந்த நிலையில், முதற்கட்டமாக, 3 அப்பாச்சி ரக போர் ஹெலிகாப்டர்கள் இன்று ஜூலை 22ம் தேதி வந்து சேர்ந்தது.
அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டன், எகிப்து ஆகிய நாடுகள் இந்த அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் பயன்படுத்த வருகிறது. தற்போது இந்தியாவும் தனது வலிமையை பெருக்கி உள்ளது.
இதையும் படிங்க: ராகுல் காந்தி சொல்றது பச்சைப் பொய்!! ராஜ்நாத் சிங்கிற்கு வக்காலத்து வாங்கும் அத்வாலே!!