தேர்தல் ஜாக்பாட்... 40 லட்சம் மகளிர் வங்கிக்கணக்கில் ரூ.9,000 வரவு... முதல்வர் அதிரடி உத்தரவு...!
சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் அசாமில் அரசு திட்டத்தின் கீழ் 40 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.9,000 வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அசாம் மாநிலத்தில் ஒருனோடோய் திட்டம் என்கிற பெயரில் பெண்களுக்கு மாதம் ரூ. 1250 வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் நான்கு மாதங்களுக்கு ரூ. 5000, மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ரூ. 4000 என மொத்தமாக ரூ. 9000 நேற்று காலை அம்மாநில பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
அசாமில் "ஒருனோடோய்" (Orunodoi) திட்டத்தின் கீழ், மார்ச் 10, 2026 அன்று, சுமார் 40 லட்சம் பெண்களுக்கு தலா 9,000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் அசாம் அரசு நேரடியாக வழங்கியுள்ளது. இந்தத் திட்டம், போகா பிஹு பண்டிகையை முன்னிட்டு, நான்கு மாதங்களுக்கான நிதி உதவியை ஒட்டுமொத்தமாக ஒரே தவணையில் வழங்கப்பட்டு மொத்தம் 9 ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு பயனாளியின் கணக்கிலும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒரே நாளில் 3,800 கோடி ரூபாயை அசாம் அரசு விடுவித்துள்ளது. இது அந்த மாநில வரலாற்றில் ஒரு சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
அசாமில் பெண்கள் தலைமையிலான குடும்பங்களை வலுப்படுத்துவதற்கான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை. நேரடிப் பலன் பரிமாற்றம் மூலம் 40 லட்சம் ஒருனோடோய் பயனாளி குடும்பங்களுக்கு தலா ரூ.9,000 வழங்கினார் , இது மாநிலம் முழுவதும் பெண்களுக்கு நிதிப் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் மேலும் வலுப்படுத்தியது” என முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: போதை மிருகங்களால் துரத்தி துரத்திப் பாலியல் கொடுமை.. 14 வயது சிறுமி நேர்ந்த துயரம்... அதிமுக கொந்தளிப்பு..!!
பஞ்சாயத்து மட்டத்திலும், தன்னாட்சி கவுன்சில்களின் கீழ் உள்ள மாவட்டங்களில் கிராம கவுன்சில் மட்டத்திலும் ஏற்பாடு செய்யப்படும் முறையான விழாக்களின் போது பணம் வழங்கப்படும் என்று சர்மா கூறியிருந்தார். ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் அசாமியப் புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதே வாரத்தில் தான் அசாம் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இதை எல்லாம் கணக்கில் வைத்தே பெண் வாக்காளர்களை கவரும் வகையில் முன்னதாகவே பணம் வழங்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டியுள்ளன.
"அருணோதை" திட்டம் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு 2020 இல் தொடங்கப்பட்டது, ஆரம்பத்தில் மாதத்திற்கு ரூ. 830 வழங்கப்பட்டது. பின்னர் இந்தத் தொகை ரூ. 1,000 ஆகவும் பின்னர் ரூ. 1,250 ஆகவும் உயர்த்தப்பட்டது. மே 2021 இல் முதல்வராகப் பொறுப்பேற்ற சர்மா, இந்தத் தொகையை மேலும் அதிகரிப்பதாகவும் அறிவித்தார். 2016 இல் அசாமில் பாஜக ஆட்சிக்கு வந்தது. அசாமின் மிகப்பெரிய வருடாந்திர கலாச்சார விழாவான ரோங்காலி பிஹுவுக்கு சற்று முன்பு அசாமில் சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட வாய்ப்புள்ளது.
அருணோதை பயனாளிகளுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரை நான்கு மாதங்களுக்கு மாதாந்திர நிதி உதவியாக தலா ரூ. 1,250 ரூபாய் வீதம் 5,000 ரூபாயும், மேலும் கூடுதலாக அசாமின் புத்தாண்டு பண்டிகையான “ரொங்காலி பிஹு ” சிறப்பு தொகையாக வழங்கப்படும் 3,000 ரூபாய் இந்த ஆண்டு 4,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு, மொத்தம் 9 ஆயிரம் ரூபாய் வங்கிக்கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிளாக்கில் சிலிண்டர் விற்பனை... அநியாய கொள்ளை..!! புலம்பித் தவிக்கும் வியாபாரிகள்..!!