×
 

பேரவையின் முதல்வருக்கு ஜால்ரா..! பட்ஜெட்டில் ஒண்ணுமில்ல..!! உதயநிதி விமர்சனம்..!

வேளாண் பட்ஜெட் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தமிழக வேளாண் பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லை என்று தெரிவித்தார். திமுக திட்டங்களை பெயர் மாற்றி புது திட்டம் போல் அறிவித்திருப்பதாக கூறியுள்ளார். மரபை மீறி பேரவையில் முதலமைச்சருக்கு ஜால்ரா போடுவதாக எதிர் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்திருக்கிறார்.

கடந்த நான்கு மாதமாக விவசாயிகள் எண்ணற்ற பிரச்சனைகளை சந்திக்கும் நிலையில் எந்த புதிய அறிவிப்பும் இல்லை என்று கூறினார். தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி முழு பயிர் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தமிழக வெற்றி கழக ஆட்சியில் அதிகம் பாதிக்கப்பட்டது விவசாயிகள் தான் என்றும் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் காவிரியில் நீர் வரவில்லை எனவும் வேளாண் பட்சத்தில் புதிய அறிவிப்புகள் இல்லை எனவும் தெரிவித்தார்.

காவிரியில் தண்ணீரை திறந்து விட கர்நாடகா மறுக்கிறது என்பதையும் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். குருவை சாகுபடி செய்யாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அதை வெளிப்படுத்தவே கருப்புச்சட்டை அணிந்து பேரவைக்கு வந்தோம் என்று கூறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்ட திமுகவினர் என்ற கருப்புச்சட்டை ஐந்து பேரவைக்கு வருகை தந்தது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள் என்ற கோரிக்கை குறித்து முதலமைச்சர் விஜய் வாய் திறக்கவில்லை என்றும் உதயநிதி தெரிவித்தார்.

இதையும் படிங்க: நஞ்சற்ற விவசாயம்... உலக சந்தையை குறிவைக்கும் தமிழக அரசு..! பட்ஜெட் அறிவிப்புகள்..!!

விவசாயிகள் பிரச்சினைகள் குறித்த குறளுக்கு முதலமைச்சர் வாய் திறப்பதே கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் காவிரி விவகாரம் குறித்து அவையில் விவாதிக்க அனுமதிக்க கோரி சபாநாயகரிடம் திமுக சார்பில் கடிதம் அளித்திருப்பதாகவும் கூறினார். விவசாயிகளின் கோரிக்கை குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். சட்டப்பேரவையில் நாளை முதல் தங்கள் எழுப்பும் கேள்விகளுக்காவது முதல்வர் விஜய் வாய் திறப்பாரா என்று பார்ப்போம் எனவும் தங்கள் கேள்விகளுக்கு முதல்வர் பதிலளிப்பார் என விவசாயிகளுடன் திமுக எம்எல்ஏக்களும் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். 

இதையும் படிங்க: விவசாயிகளுக்கு ஜாக்பாட்..! களமிறங்கிய AI..!! வேளாண் பட்ஜெட்டில் செம்ம ட்விஸ்ட்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share